Kathir News
Begin typing your search above and press return to search.

2000 ரூபாய் நோட்டு மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு இல்லை:மத்திய அரசு

புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு இல்லை என மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

2000 ரூபாய் நோட்டு மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு இல்லை:மத்திய அரசு

KarthigaBy : Karthiga

  |  26 July 2023 9:15 AM GMT

புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக கடந்த மே 19 - ஆம் தேதி அறிவித்த ரிசர்வ் வங்கி இந்த நோட்டுகளை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தி இருந்தது. இந்த காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படுமா? என மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய நிதித்துறை இணை மாதிரி பங்கஜ் சவுத்ரி எழுத்து மூலம் பதில் அளித்தார்.


அதில் அவர் தற்போதைய நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு குறித்த பரிசீலனை எதுவும் அரசிடம் இல்லை என தெரிவித்தார். 2000 ரூபாய் நோட்டுகளை போல உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை திரும்ப பெரும் திட்டம் எதுவும் அரசிடம் உள்ளதா என்ற கேள்விக்கும் இல்லை என அவர் பதில் அளித்தார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News