Kathir News
Begin typing your search above and press return to search.

ஏ.சி தேவையில்லை சுவரில் அடிக்கும் ஏ.சி பெயிண்டே போதுமா? எப்படி சாத்தியம்? - சீன விஞ்ஞானிகள் தகவல்

நமது படுக்கையறை குளுமையாக இருக்க ஏ.சி வாங்கி மாட்ட தேவையில்லை வண்ண பூச்சிகள் சுவரில் அடித்தாலே போதும் என்று சீன விஞ்ஞானிகள் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

ஏ.சி தேவையில்லை சுவரில் அடிக்கும் ஏ.சி பெயிண்டே போதுமா? எப்படி சாத்தியம்? - சீன விஞ்ஞானிகள் தகவல்

KarthigaBy : Karthiga

  |  4 Nov 2023 6:53 AM GMT

அறை வெப்பத்தை கட்டுப்படுத்தி குளுமையை கொண்டுவர தற்போது கைவசம் உள்ள ஒரே தொழில்நுட்பம் ஏ.சி மட்டுமே. இந்த வசதியை சாதாரணமானவர்கள் செய்து கொள்ள முடியாது. ஏ.சி மெஷின் குறைவான விலைக்கு கிடைத்தாலும் கரண்ட் பில் 'ஷாக்' அடிக்கும் என்பதால் வசதி படைத்தவர்களின் இல்லங்களை மட்டுமே இது அலங்கரிகிறது. இதனால் குறைந்த செலவில் அறையின் வெப்பத்தை குறைக்கவும் கூட்டவும் முடியுமாம்.இதை சாத்தியமாக்க பல நாட்டு விஞ்ஞானிகளும் ஆய்வு செய்து வந்தனர். அதில் சீன விஞ்ஞானிகள் முந்தி கொண்டு விட்டனர்.


புதுமையான ஒரு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து அதிசயப்பட வைத்துள்ளனர். ஏ.சி வாங்க வேண்டாம். சுவரில் வண்ணத்தை மட்டும் பூசுங்கள். கோடையில் குளுமையையும் குளிர்காலத்தில் வெப்பத்தையும் உணர்வீர்கள் என்று கூறுகிறார்கள். சீன விஞ்ஞானிகள். இது எப்படி சாத்தியம்? சீன டோங்கிப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வித்தியாசமான பெயிண்ட் ஒன்றை உருவாக்கியுள்ளனர். 'கிரிஸ்டல் வயலட் லேக் டோன்' என பெயரிடப்பட்டுள்ள இந்த பெயிண்ட் பல வேலைகளை செய்கிறது. அறையின் வெப்பம் 20 டிகிரிக்கு கீழே குறைந்தால் போதும் குளிரை உறிஞ்சி கொண்டு அரறை வெப்பத்தை மேலும் கொட்டுகிறது.


அதேபோல 20 டிகிரிக்கு மேல் வெப்பம் போகும்போது அறையின் வெப்பத்தை குறைக்கிறது. இந்த பெயிண்டை வண்ணம் இல்லாத பிளாஸ்டிக் பொருட்களுடன் கலந்து அறைக்குள் வண்ணமாக பூசினால் மேற்கண்ட வேலைகளை செய்ய ஆரம்பித்து விடுகிறது.குளிர்காலத்தில் அறைவெப்பத்தை நான்கு டிகிரி செல்சியஸ் வரை கூட்டுகிறது. கோடை காலத்தில் அரை வெப்பத்தை 8 டிகிரி செல்சியஸ் வரை குறைக்கிறது. இத்தகைய வெப்பநிலை மாறுவது மிக உயர்ந்த வெப்பநிலையிலேயே. சாதாரண அறை வெப்பத்தை ஒட்டி மாறக்கூடிய வெப்பநிலை எதுவும் கிடையாது. ஆனால் வண்ணமாற்றத்தை கூட்டி அறை வெப்பநிலை சீராகும். 'கிரிஸ்டல் வயலட் லேக் டோன்' என்ற வெப்பநிறமி இந்த வேலையை சிறப்பாக செய்வதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News