“காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் தேவையில்லை’’ - டிரம்பிடம் பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்!!
“காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் தேவையில்லை’’ - டிரம்பிடம் பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்!!
By : Kathir Webdesk
பிரதமர் நரேந்திர மோடி 5 நாட்கள் பயணமாக பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் நாட்டுக்குச் சென்றுள்ளார். பிரான்ஸ் பயனத்தை முடித்துவிட்டு ஐக்கிய அரபு அமீரகம் நாட்டுக்குச் சென்றார்.
அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யனுடன் பிரதமர் மோடி சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்களை முடிவு செய்தார். பின்னர் அங்கிருந்து பஹ்ரைன் நாட்டுக்கு முதல்முறையாக பிரதமர் மோடி சென்றார். அந்நாட்டு இளவரசர் கலிபா பின் சல்மான் அல் கலிபாவைச் சந்தித்து பிரதமர் மோடி பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் மீண்டும் பிரான்ஸ் திரும்பிய பிரதமர் மோடி அங்கு நடைபெறும் அங்கு நடைபெறும் ‘ஜி-7’ மாநாட்டில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த அமைப்பில் இந்தியா உறுப்பினராக இல்லை எனினும் சிறப்பு அழைப்பாளராக இந்தியா பங்கேற்றுள்ளளது. மேலும் ஜப்பான், பிரான்ஸ்,ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களையும் அவர் சந்தித்து பேசினார்.
இதைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். பல்வேறு விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், ‘‘காஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எந்த நாட்டிற்கும் தலைவலியை கொடுக்க விரும்பவில்லை. எனவே மத்தியஸ்தம் ஏதும் தேவையில்லை. இது முழுக்க முழுக்க இருநாடுகள் தொடர்பானவை’’ என்று திட்டவட்டமாக கூறினார்.
டிரம்ப் கூறுகையில் ‘‘இந்திய பிரதமர் மோடி காஷ்மீரில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக கூறினார். காஷ்மீர் பிரச்சினையை இருநாடுகள் தொடர்புடையது. தங்களுக்குள் உள்ள பிரச்சினையை இருநாடுகளும் பேசி தீர்த்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது’’ என்று கூறினார்.