Kathir News
Begin typing your search above and press return to search.

'புள்ளிங்கோ கட்டிங்' கிடையாது- முடி திருத்தும் தொழிலாளர் சங்கத்தில் முடிவு!

பள்ளி மாணவர்களுக்கு ராமநாதபுரத்தில் புள்ளிங்கோ கட்டிங் செய்வது இல்லை என்று முடி திருத்தும் தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

புள்ளிங்கோ கட்டிங் கிடையாது- முடி திருத்தும் தொழிலாளர் சங்கத்தில் முடிவு!
X

KarthigaBy : Karthiga

  |  1 Jun 2024 8:23 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஒன் சைடு பாக்ஸ் கட்டிங், கோடு வரைதல் போன்ற புள்ளிங்கா கட்டிங் செய்வது இல்லை என முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மருத்துவர் சமூக நல சங்கம் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்துமாரி, செயலர் செந்தில்குமார் , பொருளாளர் சேகர் ஆகியோர் கூறியிருப்பதாவது:-

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் பத்தாம் தேதி திறக்கப்பட உள்ளது. மாணவர்கள் சிகை அலங்காரம் செய்வதற்கு சலூன் கடைகளுக்கு வரும்போது சமூக பொறுப்புடன் தொழிலாளர்கள் நடந்து கொள்ள வேண்டும். எனவே மாணவர்கள் வலியுறுத்தினாலும் ஒன்சைடு பாக்ஸ் கட்டிங், கோடு வரைதல் போன்ற புள்ளிக்கோ கட்டிங் செய்ய முடியாது என மறுத்து விட வேண்டும் .இதை அனைத்து சலூன் கடை தொழிலாளர்களும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE :Newspaper

Next Story
கதிர் தொகுப்பு
Trending News