டியூஷன் கூடாது, அரசியல் ஈடுபாடு கூடவே கூடாது - நல்லாசிரியர் விருது புதிய விதிமுறைகள், அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
டியூஷன் எடுப்பவருக்கு நல்லாசிரியர் விருது கிடையாது என திமுக அரசு அறிவித்துள்ளது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
By : Mohan Raj
டியூஷன் எடுப்பவருக்கு நல்லாசிரியர் விருது கிடையாது என திமுக அரசு அறிவித்துள்ளது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
38 மாவட்டங்களில் இருந்து 386 ஆசிரியர்களை விருதுக்கு தேர்வு செய்ய புதிய நடைமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை.
அதன்படி நல்லாசிரியர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு டியூஷன் எடுக்கும் ஆசிரியர்களின் பெயரை பரிந்துரை கூடாது என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் அரசியல் தொடர்பான ஆசிரியர்களின் பெயரையும் மாநில நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது, தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் சி.இ.ஓ தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும் ஐந்து ஆண்டுகள் எந்த புகாருக்கும் இடம் தராமல் ஆசிரியர்கள் பணியாற்றி இருக்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.