தமிழகத்தில் தலைமை பதவிக்கு வெற்றிடம் இல்லை! தகுதி உள்ளவர்கள் பலர் உள்ளனர் - பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்!
தமிழகத்தில் தலைமை பதவிக்கு வெற்றிடம் இல்லை! தகுதி உள்ளவர்கள் பலர் உள்ளனர் - பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்!
By : Kathir Webdesk
பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா மகள் திருமணம் காரைக்குடியில் நேற்று நடைபெற்றது. திருமணத்தில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் முக்கிய மாநில பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில் “ மது போதைக்கு இன்றைய இளைஞர்கள் அடிமையாவதால் மனித உயிர் மிகவும் மலிவாக போய்விட்டது. இதனை தமிழக அரசு தடுக்க முன்வர வேண்டும்.
தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பாஜக மாநில தலைவர் பதவியிடங்கள் காலியாக உள்ளது. விரைவில் அவை பூர்த்தி செய்யப்படும்.
பக்தி மற்றும் ஐதீகங்களில் நம்பிக்கையுள்ள இந்து குடும்பத்தை சேர்ந்த குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்ல மாட்டார்கள். சபரிமலை கோவில் விவகாரத்தில் இன்னும் 2 வருடத்துக்குள் நல்ல தீர்ப்பு வரும்.
தமிழகத்தில் தலைமை தாங்கும் பண்பு நிறைய பேரிடம் உள்ளது. வெற்றிடம் என்பது மாயை ஆகும்" என சமீபத்தில் ரஜினிகாந்த அளித்த பேட்டி குறித்து கேள்வி கேட்ட நிருபருக்கு பதில் அளித்தார்.