Kathir News
Begin typing your search above and press return to search.

சபரிமலையில் வி.ஐ.பி தரிசன முறை இல்லை என்பதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் - திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

சபரிமலையில் வி.ஐ.பி தரிசன முறை இல்லை என்பதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலையில் வி.ஐ.பி தரிசன முறை இல்லை என்பதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் - திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

KarthigaBy : Karthiga

  |  8 Dec 2022 3:45 PM GMT

சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவை நடத்துவது தொடர்பாக என் ஹான்ஸ் ஏவியேசன் என்ற தனியார் நிறுவனம் இணையதளத்தில் ஒரு விளம்பரம் செய்திருந்தது. அந்த விளம்பரத்தில் ரூபாய் 48,000 கட்டினத்தில் ஹெலிகாப்டர் சேவை சன்னிதானத்தில் வி.ஐ.பி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திது. அதாவது சபரிமலையில் இதுவரை வி.ஐ.பி தரிசன முறை கிடையாது. மறைமுகமாக கோவில் நிர்வாகம் விஐபி தரிசனத்தை கொண்டு வருகிறதோ என்ற சந்தேகம் பக்தர்களுக்கு உருவானது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கேரளா ஹை கோர்ட் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.


இதில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனமும் திருவிதாங்கூர் தேவஸ்தானமும் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது.அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையின் போது தனியார் நிறுவனம் இணையதளத்திலிருந்து விளம்பரத்தை நீக்கியதுடன் மன்னிப்பும் கோரியது. மேலும் இது தொடர்பாக கேரளா ஹை கோர்ட் நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன் பி.ஜி அஜித்குமார் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-


சபரிமலை நிலக்கல்லில் உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தை மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தொடர்ச்சியான சேவைக்கு பயன்படுத்தக் கூடாது. மண்டல மகரவிளக்கு காலங்களில் இதிலே பயன்படுத்த வேண்டும் என்றால், முன் அனுமதி பெற வேண்டும். கேரள போலீஸ் சட்டத்தின்படி சிறப்பு பாதுகாக்க பட்ட பகுதியாக நிலக்கல் உள்ளது. இது பெரியார் புலிகள் சரணாலயத்தில் இருந்து சுமார் 800 மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த பகுதி சீசன் இல்லாத நாட்களில் வனவிலங்குகளின் வாழிடமாகவும் விளங்குகிறது . கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இதுவரை 12 முறை மட்டுமே ஹெலிகாப்டர் தரை இறங்கி உள்ளது.


சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் அனைவரும் சாதாரண பக்தர்கள் தான் இவர்களில் யாருக்கும் சிறப்பு சலுகை அளிக்கக்கூடாது . வி.ஐ.பி தரிசன முறை சபரிமலையில் இல்லை என்ற நடைமுறையை திருவிதாங்கூர் தேவஸ்தானம் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது உள்ளது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News