ஒரு அங்குலம் நிலம் கூட விட முடியாது: பாதுகாப்புத்துறை அமைச்சர் திட்டவட்டம்.!
ஒரு அங்குலம் நிலம் கூட விட முடியாது: பாதுகாப்புத்துறை அமைச்சர் திட்டவட்டம்.!
By : Kathir Webdesk
சீனாவிற்கு ஒரு அங்குலம் நிலம் கூட விட்டுக்கொடுக்க முடியாது என்று மாநிலங்களவையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இன்று நடைபெற்ற மாநிலங்களவை நிகழ்வில் கிழக்கு லடாக் பகுதியில் நிலவும் பிரச்சனை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்துள்ள ராஜ்நாத் சிங், கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் சோ ஏரி பகுதியில் படைகளை விலக்கிக் கொள்ள இந்தியா, சீனா ஆகிய இருநாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளது.
எல்லையில் அமைதியான சூழல் நிலவ இந்திய உறுதி ஏற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை இரண்டு நாடுகளும் மதிக்க வேண்டும். பழைய நிலையே தொடர வேண்டும் என கூறினார்.
மேலும், ஒரு அங்குலம் நிலத்தை கூட சீனாவுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் என மாநிலங்களவையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்காமல் இருந்தனர். இதனால் சீனா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லையில் அத்து மீறி நடந்து கொண்டனர். ஆனால் தற்போது பிரதமராக மோடி இருப்பதால் ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார். இதனால் அத்துமீறும் அண்டை நாடுகளுக்கு பதிலடி உடனடியாக கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாகவே அண்டை நாடுகள் வாலை சுருட்டுக்கொண்டு உள்ளது.