Kathir News
Begin typing your search above and press return to search.

கார் மட்டும் அல்ல: சொந்தமாக வாங்கி அனுபவிக்கும் மோகம் பல பொருள்களின் மேல் குறைந்து வருகிறது!! பொருளாதார நிபுணர்கள் அலசல்!!

கார் மட்டும் அல்ல: சொந்தமாக வாங்கி அனுபவிக்கும் மோகம் பல பொருள்களின் மேல் குறைந்து வருகிறது!! பொருளாதார நிபுணர்கள் அலசல்!!

கார் மட்டும் அல்ல: சொந்தமாக வாங்கி அனுபவிக்கும் மோகம் பல பொருள்களின் மேல் குறைந்து வருகிறது!! பொருளாதார நிபுணர்கள் அலசல்!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Sept 2019 5:56 PM IST


கார்கள், இதர மோட்டார் வாகனங்கள், வீடுகள், விலை உயர்ந்த செல்போன்கள், கணினிகள் உட்பட எந்த விலை மதிப்புள்ள பொருளையும் முழு பணம் கொடுத்து வாங்கி வைத்து அனுபவிக்கும் பழக்கம் இனி மெல்ல..மெல்ல குறைந்து விடும் என்றும் பொது சாதன பயன்பாடு அதிகரிக்கும் என்றும் அதே சமயம் ஒரு பொருளின் உற்பத்தி இதனால் குறைந்து விடாது என்றும், விற்பனை போக்கு மாறுபட்ட வடிவத்தை நோக்கி தற்போது செல்லத் தொடங்கியுள்ளது என்றும் வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் அனைத்து வணிகங்களும் தங்கள் வணிக நடைமுறை மாதிரிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.


சமீபத்தில் மாருதி சுசுகி தலைவர் ஆர் சி பார்கவா பத்திரிக்கைக்கு அள்ளித்த பேட்டி ஒன்றில் “ ஓலா, உபேர் போன்ற பொது வாகனங்கள் மீது மக்கள் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர் என்கிற நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கருத்தை ஆதரித்து பேசினார்.


அது மட்டுமல்லாமல் ஆண்டு தனி நபர் வருமானம் இந்தியாவில் 2,200 டாலர் மட்டுமே ..ஆனால் ஐரோப்பிய நாடுகளில் ஆண்டுக்கு தனி நபர் வருமானம் 40,000 டாலர்களாக உள்ளன. இந்த நிலையில் ஆண்டுக்கு 10-15 சதவீதம் கார் விற்பனை எப்படி உயரும் .. நாம் அவ்வாறு எதிர்பார்க்கலாமா, இது பயனற்ற எதிர்பார்ப்பு எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் கார் விலை மற்றும் தரங்களில் இந்திய கார்கள் ஐரோப்பிய கார்களை விட மிகவும் குறைந்தவை என கூற முடியாது .. இரண்டு கார்கள் இடையே வித்தியாசங்கள் இல்லாத நிலையில் வருமானம் குறைந்த நம்முடைய வாடிக்கையாளர்கள் மட்டும் காருக்கு எப்படி பணம் செலுத்துவார்கள் .. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் 10-15 சதவீதமாக விற்பனை வளரும் என கார் உற்பத்தியாளர்கள் எப்படி எதிர்பார்க்கிறார்கள் ? ”


பார்கவாவின் கருத்துக்கள் இங்கு 3 வித அம்சங்களையும், மதிப்புகளையும் தெளிவு படுத்துகின்றன.


முதலாவதாக, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார் ஐரோப்பாவில் விற்பனையாகும் கார்களின் தரம், விலைக்கு கிட்டத்தட்ட ஒத்ததாக இருந்தால் இந்திய ஏற்றுமதியாளர்கள் ஏன் ஏற்றுமதியில் கவனம் செலுத்தக் கூடாது ... ஏற்றுமதி சந்தையை உருவாக்க அவர்கள் தற்போது சம்பாதிக்கும் லாபத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், தொழில்களை பாதுகாத்துக் கொள்வதில் அரசாங்கத்தை மட்டுமே எதிர்பார்த்துக் கொண்டு பிச்சை பாத்திரங்களுடன் நிற்கக்கூடாது.


இரண்டாவதாக, ஐரோப்பாவிலும் சீனாவிலும் இருப்பதைவிட வாகனங்களுக்கான இந்திய வரி மிக அதிகம் என்றும் பார்கவா கூறினார். ஆனால் இது மட்டும் காரணமில்லை. சொந்தமாக கார் வாங்குவதற்கான உண்மையான செலவு இப்போது கூட குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது ஸ்டிக்கர் விலைகள் மற்றும் வரிகளின் எளிய சேர்த்தலுக்கு அப்பால் செல்கிறது. கடன்களில் ஈ.எம்.ஐ.களை செலுத்திய பின் தேய்மானம், பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு செலவு ஆகியவை உண்மையான செலவில் அடங்கும். ஆனால் இது மட்டுமல்ல இன்னும் அதிக செலவுகளை ... சொந்தமாக வாங்கும் கார்கள் வைத்துக் கொண்டுதான் உள்ளது.


இன்று பெரும்பாலான நகரங்களில், புதிய கட்டிடங்களில் கார் நிறுத்தும் பார்க்கிங் இடங்களுக்காக ஒவ்வொரு அபார்ட்மென்ட் உரிமையாளருக்கும் ரூ .2 முதல் 5 லட்சம் வரை செலவாகின்றன. இது சில நேரங்களில் குறைந்த விலை கார்களை வாங்கும் மன நிலைக்கு அழைத்து செல்லலாம். அல்லது இரண்டாவது விற்பனை கார்களுக்கான விலையை இரட்டிப்பாக்கலாம். கார் உரிமையின் மொத்த செலவை கணக்கில் கொள்ளும் போதுதான் ஏன் தற்போதுள்ள தலைமுறையினருக்கு சொந்தமாக கார் வாங்கும் ஐடியா குறைந்து வருகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.


மேலும் இப்போதுள்ள டிஜிட்டல் பொருளாதாரத்தில் கடனுக்கான நுகர்வோர் அணுகுமுறைகள் மாற்றப்பட்டு வருகின்றன. அதாவது வாராக்கடன். தவணைகள் தாமதமாதல் இன்னும் பல காரணங்களால் கடன் நிறுவனங்களின் அணுகுமுறை சற்று கடினமாக மாறிவரும் நிலையில் உரிமையாளர் சமூகம் படிப்படியாக குத்தகை அல்லது வாடகை சமூகத்துக்கு மாற்றப்படுகிறது,


இன்று நீங்கள் கார்களையும் வீடுகளையும் குத்தகைக்கு விடலாம், கார்களை வாங்குவதற்கு மாற்றாக பார்கவா குறிப்பிட்டுள்ள கேஜெட்டுகள் கூட அதிக அளவில் குத்தகைக்கு விடப்படும் அல்லது பழையவற்றிற்கான புதிய பரிமாற்றங்கள் தொடர்ந்து தேவைப்படும்.


கிளவுட் மென்பொருளை கூட தற்போது வாடகைக்கு எடுக்கும்போது, நிலையான பராமரிப்பு தேவைப்படும் அதன் நகலை ஏன் மிக அதிக விலை கொடுத்து சொந்தமாக வாங்க வேண்டும்? விலை உயர்ந்த மொபைல்கள் வாங்க ரூ .80,000-ரூ .90,000 செலவாகும், அதே கேஜெட் இரண்டு வருடங்களுக்குள் காலாவதியாகும் போது, முழு விலையையும் செலுத்துவதன் மூலம் அதை ஏன் சொந்தமாக்க வேண்டும்? குறிப்பாக பணம் கடன் வாங்குவதன் மூலம் அதை ஏன் நாம் செய்ய வேண்டும் என்கிற எண்ணங்கள் தற்போதுள்ள சிந்தனை செய்யும் சமுதாயத்தினர் மத்தியில் வந்து விட்டது .


இனிமேல் கேஜெட் தயாரிப்பாளர்கள் தங்கள் பொருள்களை கவர்ச்சியான முறையில் பளபளப்பாக விற்றால் மட்டும் போதாது. பொருள்கள் பழையதாகிவிட்டால், கெட்டுப் பொய் விட்டால் அவற்றை திருப்பி வாங்கிக் கொண்டு புதிய பொருள்களை கச்சிதமான விலையில் விற்பனை செய்ய வேண்டும். இது போன்ற எளிய பரிமாற்ற சேவை திட்டங்களை உற்பத்தியாளர்கள் செய்ய வேண்டும்.


இதனால் சொந்தமாக பொருள்கள் வாங்க வேண்டும் என்கிற வாடிக்கையாளர்களின் மன நிலையை நாம் கால நீட்டிப்பு செய்யலாம். உரிமையாளர் சமூகம் முடிவுக்கு வருவதை இது மெதுவாக்குகிறது, கார் உற்பத்தியாளர்களாகட்டும், அல்லது மடிக்கணினிகள் அல்லது ஸ்மார்ட்போன்கள் அல்லது வீடுகளின் தயாரிப்பாளர்களாக இருந்தாலும் அனைத்து வணிகர்களும் தங்கள் வணிக மாதிரிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. இவ்வாறு ஸ்வராஜ்யா ஆங்கில சஞ்சிகையில் ஆர்,ஜகன்னாதன் என்கிற பொருளாதார கட்டுரையாளர் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.


https://swarajyamag.com/economy/not-just-millennials-or-cars-the-old-ownership-model-no-longer-works-for-many-products


Next Story
கதிர் தொகுப்பு
Trending News