Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்காவிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் இந்துக்களின் பண்டிகை

தீபாவளி பண்டிகை அன்று அமெரிக்காவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்காவிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் இந்துக்களின் பண்டிகை

KarthigaBy : Karthiga

  |  28 Jun 2023 1:00 PM GMT

தீபங்களின் திருவிழா என்று அழைக்கப்படும் தீபாவளி பண்டிகை இந்தியா மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர் என பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது, அதேபோல் கடந்த ஆண்டு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையிலும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது .இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் தீபாவளிக்கு அரசு விடுமுறை அளிக்கும் சட்டத்தை முதன்முதலாக பென்சில் வேனியா மாகாணம் இயற்றியது.


இந்த நிலையில் நியூயார்க் மாகாண நிர்வாக சபை உறுப்பினரும் இந்திய வம்சாவளியுமான ஜெனிபர் தீபாவளி பண்டிகை அன்று அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் மசோதாவை அறிமுகப்படுத்தினார் . இந்த மசோதா செனட் சபை மற்றும் நிர்வாக சபையில் நிறைவேற்றப்பட்ட கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


இதனால் அங்கு வசிக்கும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த சட்டத்தை நிறைவேற்றும் முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில் தற்போது நிர்வாக சபையின் ஒப்புதலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News