கொரோனா ஆட்டமே இன்னும் முடியவில்லை! சீனாவில் பரவி வரும் புதிய வைரஸ் - அதிகாரப்பூர்வ ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
கொரோனா ஆட்டமே இன்னும் முடியவில்லை! சீனாவில் பரவி வரும் புதிய வைரஸ் - அதிகாரப்பூர்வ ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

கொரோனா வைரஸ் தாக்கமே இன்னும் இன்னும் ஓய்தபாடில்லை. அதற்குள், மற்றோரு வைரஸ் சீனாவில் பரவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
புதிய வைரஸால் பாதிக்கப்பட்ட ஜியாங்சுவின் தலைநகரான நாஞ்சிங்கைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டன.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடலின் உள்ளே லுகோசைட் அதாவது ரத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், மற்றும் ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் எண்ணிக்கை குறந்துள்ளதை கண்டறிந்தனர். ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு, அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
Tick-borne virus எனப்படும் இந்த வைரஸால் பரவும் ஒரு புதிய தொற்று நோயினால், சீனாவில் ஏழு பேர் இறந்து விட்டனர். இதுவரை 60 பேருக்கு இந்த தொற்று பரவியுள்ளது என சீனாவில் உள்ள அதிகாரப்பூர்வ ஊடகமான குளோபல் டைம்ஸ் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன. இது மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவுவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் வரை, இதுபோன்ற வைரஸ் தொற்று குறித்து பீதி அடைய வேண்டிய அவசியமில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.