இனி தமிழக ஏ.டி.எம்'களில் தமிழிலும் தகவல் பெறலாம் - நிர்மலா சீதாராமன் கூறிய சூப்பர் தகவல்
தமிழகத்தில் வங்கி கிளைகள் மற்றும் ஏ.டி.எம்'களில் தமிழிலேயே பணப்பரிவர்த்தனை செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
By : Mohan Raj
தமிழகத்தில் வங்கி கிளைகள் மற்றும் ஏ.டி.எம்'களில் தமிழிலேயே பணப்பரிவர்த்தனை செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருக்கும் வங்கி கிளைகள் மற்றும் ஏ.டி.எம்'களில் தமிழ் மொழி இல்லை எனவும் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளும் இருப்பதால் அனைவரும் பணம் பரிவர்த்தனை செய்ய சிரமப்படுகிறார்கள் எனவும் பல புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.
இதனை சிறப்பு கவனம் எடுத்து சரி செய்வதாக ஏற்கனவே மத்திய நிதித்துறை அமைச்சகம் கூறிவந்த நிலையில் தற்போது அது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள வங்கி கிளைகள் ஏ.டி.எம்'களில் தமிழிலேயே பண பரிவர்த்தனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் கேள்விக்கு பதில் அளிக்கும் போது இவ்வாறு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.