அணுசக்தி நாடு பிச்சை எடுக்கலாமா: இம்ரான்கான் மீது பாகிஸ்தான் மக்கள் கோபம்!
By : Thangavelu
சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) பாகிஸ்தான் நாட்டின் கடன்கள் குறித்து வெளியிட்டுள்ளது. இது போன்ற தொடர்ந்து கடன்களை பாகிஸ்தான் அரசு வாங்குவதால் மக்களின் செல்வாக்கை இழந்திருப்பதாக ஒரு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் டாலர்களை கடனாக வழங்கியது. இதன் காரணமாக தொடர்ந்து அந்த நாடு பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது. பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் மற்றும் மின் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் நிதியமைச்சர் சவுகத் தர் சமீபத்தில் ஒரு ட்விட் செய்திருந்தார். அதாவது பாகிஸ்தானுக்காக 6வது கடன் தவணைக்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் மகிழ்ச்சியுடன் தகவலை வெளியிடுகிறேன் என்றார். இவரது ட்விட்டுக்கு அந்த நாட்டு மக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஒரு ஊடகம் தலையங்கம் மூலம் கண்டனத்தை பதிவிட்டுள்ளது. தினந்தோறும் கடன் வாங்கி நடத்தப்படும் ஒரு அணுசக்தி நாடு என்றால் அது பாகிஸ்தான் மட்டுமே என்றார். அது மட்டுமின்றி அணுசக்தி நாடாக இருந்துட்டு இப்படி பிச்சை எடுப்பது சரிதானா என்ற கேள்வியை பிரதமர் இம்ரான்கானுக்கு எழுப்பியுள்ளது.
Source: Daily Thanthi
Image Courtesy: Business Recorder