Kathir News
Begin typing your search above and press return to search.

ஜம்மு-காஷ்மீர் : இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களில் சேரும் இளைஞர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி - 370வது சட்டப்பிரிவு ரத்து காரணமா?

இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களில் சேரும் காஷ்மீர் இளைஞர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் : இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களில் சேரும் இளைஞர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி - 370வது சட்டப்பிரிவு ரத்து காரணமா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 July 2020 1:45 PM GMT

கடந்த ஆண்டு ஆகஸ்டில் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதிலிருந்து, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களில் சேரும் காஷ்மீர் இளைஞர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளதாக தி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பயங்கரவாதக் குழுக்களில் சேரும் இளைஞர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 15 வரை 67 ஆகக் குறைந்தது, இதே காலகட்டத்தில் போன வருடம் இது 105 ஆக இருந்தது, அதே நேரத்தில் பயங்கரவாத சம்பவங்களும் 188லிருந்து 120 ஆகக் குறைந்துவிட்டன.

ஜனவரி முதல் ஜூலை பாதி வரை 22 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உள்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். ஜம்மு-காஷ்மீரில் இதுவரை பயங்கரவாதத்தால் உள்ளூர்வாசிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட 41,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் அவர் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த ஆண்டு கொல்லப்பட்ட 136 போராளிகளில் 110 பேர் உள்ளூர்வாசிகள், மீதமுள்ளவர்கள் பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி வந்தவர்கள். இந்த ஆண்டு குறைவான IED தாக்குதல்கள் மற்றும் கையெறி தாக்குதல்கள் நடந்தன. இந்த ஆண்டு IED தாக்குதல்களின் எண்ணிக்கை 21 ஆக இருந்தது, 2019 ல் 51க்கும் குறைவாக இருந்தது, அதே நேரத்தில் இந்த ஆண்டு ஒரு IED தாக்குதல் பதிவாகியுள்ளது, இது கடந்த ஆண்டில் ஆறாக இருந்தது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாகவும் அமைதி ஓரளவுக்கு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஏழு மாதங்களில் 136 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர், இது 2019ல் கொல்லப்பட்ட 126 பேரை விட அதிகமாகும்.

இதற்கிடையில், ஜனவரி 1 முதல் 35 பாதுகாப்பு படையினர் கடமையை செய்யும் போது உயிரிழந்துள்ளனர். ஹிஸ்புல் முஜாஹிதீன் (H.M), அதன் தளபதி ரியாஸ் நாய்கூ உட்பட 50 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மே மாதம் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் ஹிஸ்புல் தளபதி கொல்லப்பட்டான்.

கொல்லப்பட்ட மற்ற பயங்கரவாதிகளில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் - லஷ்கர்-இ-தைபா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது, இஸ்லாமிக் ஸ்டேட் J & K மற்றும் அன்சார் கஸ்வத்-உல் ஹிந்த்.

Source: https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/since-revocation-of-article-370-kashmiri-youths-joining-terrorist-ranks-dropped-by-more-than-40/articleshow/77227229.cms?from=mdr

Next Story
கதிர் தொகுப்பு
Trending News