Kathir News
Begin typing your search above and press return to search.

கன்னியாஸ்திரி விஷம் குடித்து தற்கொலை - காரணம் என்ன?

நாகர்கோவில் அருகே கன்னியாஸ்திரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்ட செய்திகள்

கன்னியாஸ்திரி விஷம் குடித்து தற்கொலை - காரணம் என்ன?
X

KarthigaBy : Karthiga

  |  19 Sept 2022 12:45 PM IST

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள வரதராஜன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ். இவருடைய மகள் அன்பு விஜய் ஞான ஜோதி கன்னியாஸ்திரியான இவர் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு தேனியில் உள்ள பள்ளியில் இருந்து மாற்றலாகி நாகர்கோவில் அருகே உள்ள மாடத்தட்டு விளைக்கு வந்தார் .பின்னர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார் .


இதற்காக ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்தார். அவருடன் வேறு சில கன்னியாஸ்திரிகளும் வசித்தனர் .இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அன்பு விஜய் ஞான ஜோதி தான் தங்கி இருந்த வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அவருடன் தங்கி இருந்த சக கன்னியாஸ்திரிகள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலனின்றி அன்பு விஜய் ஞானஜோதி நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார்.


இது குறித்து அவரது சகோதரி வரதராஜன் பேட்டையைச் சேர்ந்த ஜோதி இரணியல் போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கு காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கன்னியாஸ்திரி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News