ஆயுர்வேத வைத்தியங்களுக்குப் பயன்படும் இவற்றின் குணாதிசயங்கள்.!
Nutritional importance of black cardamom.
By : Bharathi Latha
கருப்பு ஏலக்காய் என்பது பலதரப்பட்ட மக்களாலும் உணவு தயாரிப்புகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு வகை மசாலா பொருளாகும். சிறிய மற்றும் பெரிய வகை ஏலக்காய்கள், நம்மில் பெரும்பாலனோருக்குத் தெரியாத பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. பல ஆயுர்வேத வைத்தியங்களில் கருப்பு ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது. கருப்பு ஏலக்காய் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளை குறைக்க பயனுள்ளதாக இருக்கிறது. கருப்பு ஏலக்காய் முடி மற்றும் சருமத்திற்கு நன்மை பயக்கிறது. இது, இரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது மற்றும் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.
கருப்பு ஏலக்காய் என்பது, உணவின் நறுமணத்தை அதிகரிக்க உதவும் ஒரு சிறந்த மசாலா பொருளாகும். இது பிற மசாலாப் பொருட்களிலிருந்து வேறுபட்டு தனித்துவமாக விளங்குகிறது. பெரிய ஏலக்காய், பண்டையக் காலத்தில் இருந்தே ஏராளமான உணவு தயாரிப்புகளில் உணவின் சுவையை மேம்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. கருப்பு ஏலக்காய் அதன் மருத்துவ மதிப்புகளின் காரணமாக சிறந்து விளங்குகிறது. கருப்பு ஏலக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை உடலில் இருந்து நீக்க உதவுகின்றன. இது, புற்றுநோயின் அச்சுறுத்தலைக் குறைக்கிறது. கருப்பு ஏலக்காய் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. மற்றும் இதனைக் குறைந்த அளவிலேயே உணவில் சேர்க்க வேண்டும். மனச்சோர்வு பிரச்சினைக்கு சிகிச்சையளிப்பதில், கருப்பு ஏலக்காய் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஏலக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக் கூறுகள் மன அழுத்தத்தைக் குறைக்கின்றன.
கருப்பு ஏலக்காயில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. எனினும், இது சில சந்தர்ப்பங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். கருப்பு ஏலக்காயின் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும். கர்ப்பிணி பெண்கள் ஏலக்காயை மிகக் குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும். முதல் முறையாக கர்ப்பம் தரிக்கும் பெண்கள் கருப்பு ஏலக்காயை உட்கொள்வது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும். இரைப்பை பிரச்சினைகள் உள்ளவர்கள் கருப்பு ஏலக்காயை உட்கொள்ளக்கூடாது. ஏலக்காய் உட்கொள்வதினால், வாயில் கொப்புளங்கள் ஏற்படக்கூடும். தினசரி, ஏதேனும் மருந்துகளை உட்கொள்பவர்கள் கருப்பு ஏலக்காயை உட்கொள்வது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும்.
Input & Image courtesy: Logintohealth