Kathir News
Begin typing your search above and press return to search.

காய்ச்சலை எதிர்த்துப் போராடும் குணம் கொண்ட இதன் விசேஷ நன்மைகள் !

Nutritional importance of mangosteen.

காய்ச்சலை எதிர்த்துப் போராடும் குணம் கொண்ட இதன் விசேஷ நன்மைகள் !
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  29 Aug 2021 1:24 AM GMT

மங்கோஸ்டீன் பழம் வெளிபுறத்தில் ஊதா நிறத்திலும் உள்புறத்தில் வெண்மையாகவும் காணப்படுகிறது. இது மிகுந்த இனிமையாகவும் சுவையாகவும் உள்ளது. எனினும், இதன் விதைகள் கசப்பான சுவையைக் கொண்டுள்ளது. மாங்கோஸ்டீன் பழத்தில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் கார்போஹைட்ரேட்டுகளும், அதிகளவில் நார்ச்சத்துகளும் உள்ளன. இதில் வைட்டமின் A, வைட்டமின் C, இரும்பு, கால்சியம் மற்றும் பொட்டாசியம் நிரம்பியுள்ளது.


மாதவிடாயின் போது பெண்கள் பல வகையான சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இதுபோன்ற சிக்கல்களை சமாளிக்க மாங்கோஸ்டீன் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள் உதவுகின்றன. மாங்கோஸ்டீன் பழத்தை உட்கொள்வது, உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகிறது என்பதை சில ஆய்வுகள் நிரூபிக்கின்றன. இதில் நல்ல அளவில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தினசரி காலையில் ஒரு மாங்கோஸ்டீன் சாப்பிடுவது, உடலுக்கு தேவையான ஆற்றலை நாள் முழுவதும் வழங்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.


மாங்கோஸ்டீன் பழம் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு நன்மை பயக்கிறது. இதில் நரம்பு மண்டலத்தை பராமரிக்க உதவும் வைட்டமின் C உள்ளது. மாங்கோஸ்டீன் பழத்தை சாப்பிடுவதன் மூலம், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இயலும். இது நோய்த்தொற்றுகளை எதிராக போராட உடலுக்கு உதவுகிறது. மங்கோஸ்டீன் பழத்தில் ஆன்ட்டி அழற்சி பண்புகள் உள்ளன, இவை வீக்கத்தைக் குறைக்கின்றன. சளி மற்றும் காய்ச்சலைக் குணப்படுத்துவதற்கும் இது நன்மை பயக்கிறது. மங்கோஸ்டீன் பழம் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. எனினும், இதன் அதிகப்படியான உட்கொள்ளல் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். கர்ப்பிணிப் பெண்கள் மங்கோஸ்டீனை உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் இது கருவில் உள்ள குழந்தையின் உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

Input:https://food.ndtv.com/food-drinks/8-incredible-benefits-of-mangosteen-the-queen-of-fruits-1679593

Image courtesy:NDTV news



Next Story
கதிர் தொகுப்பு
Trending News