ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவுத் தொடங்கும்: அமெரிக்க அதிபர் எச்சரிக்கை!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, தற்போதைய சூழலில் உலகளவில் ஒமைக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவக்கூடியதாக உள்ளது. இது அமெரிக்காவிலும் வேகமாக பரவத் தொடங்க வாய்ப்பு இருக்கிறது.
By : Thangavelu

கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் மரணத்தை சந்திக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி மட்டுமே நமக்கு நிஜமான பாதுகாப்பை உறுதி செய்யும். எனவே தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை மக்கள் உணர்ந்திருக்க வேண்டும்.
மேலும், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுகொண்டவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொள்ளலாம் என்று அதிபர் ஜோ பைடன் கூறினார். உலக அளவில் கொரோனாவுக்கு அதிகமான பாதிப்புகளை சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவும் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: Daily Thanthi
Image Courtesy:The Economics Times