Kathir News
Begin typing your search above and press return to search.

ஏழாவது சம்பள கமிஷன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

ஏழாவது சம்பள கமிஷன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஏழாவது சம்பள கமிஷன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!
X

KarthigaBy : Karthiga

  |  19 April 2024 3:30 PM GMT

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக சமீபத்தில் உயர்த்தப்பட்டது .அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும் போது வீட்டு வாடகை படிவம் அதற்கு ஏற்றார் போல் உயர்த்தப்படும். ஆனால் இதுவரை வீட்டு வாடகைப்படி குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை . இதுகுறித்து ருத்ரா சட்ட அலுவலக நிறுவனங்களில் ஒருவரான சஞ்சீவ் குமார் கூறுகையில் , வீட்டு வாடகைப்படியை சரியாக கணக்கிட மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மற்ற சலுகைகளை பற்றிய புரிதல் அவசியம் ஆகிறது.

பொதுவாக வீட்டு வாடகைப்படியானது ஊழியர் எந்த வகை நகரத்தில் வசிக்கிறார் என்பதை பொருத்ததே என்று கூறினார். வீட்டு வாடகைப்படி அந்த நகரத்தின் வகையைப் பொறுத்து X,Y மற்றும் Z என்று பிரிக்கப்படுகின்றன. இதில் ஏழாவது சம்பளம் அகவிலைப்படி 25 சதவீதத்தை எட்டிய போது அடிப்படை சம்பளத்தில் X,Y மற்றும் Z நகரங்களுக்கு முறையை வீட்டு வாடகைபடியானது 27 சதவீதம் 18 சதவீதம் மற்றும் 9 சதவீதம் என முன்பு கொடுக்கப்பட்டுள்ளது. பிறகு தற்போது அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டிய பிறகு வீட்டு வாடகை படி விகிதங்கள் முறையே xy மற்றும் Z நகரங்களில் அடிப்படை சம்பளத்தில் 30 சதவீதம் 20% மற்றும் 10% என திருத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News