ஒரே நாடு ...ஒரே அடையாள அட்டை !! அமித்ஷாவின் யோசனைக்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு!!
ஒரே நாடு ...ஒரே அடையாள அட்டை !! அமித்ஷாவின் யோசனைக்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு!!
By : Kathir Webdesk
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் வரும் 2021-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான தலைமை அலுவலக கட்டுமானங்களுக்கான பணியை புது டெல்லியில் அமித் ஷா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
அப்போது அமித் ஷா பேசுகையில் , மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் மனிதவளம், பொது மக்களின் வாழ்வாதார நிலை, கலாச்சாரம், பொருளாதாரம் தொடர்புடைய விவரங்களை அறிய முடிவதாகவும், இதனை அறிவியல் பூர்வ அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் வரும் 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் செல்போன் ஆப் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறினார். ஒருவர் உயிரிழக்கும் போது அதுகுறித்த தகவல்களை பொது மக்கள் தானாகவே சேர்க்கும் வழியில் புதிய முறையை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதேபோல் ஆதார், பாஸ்போர்ட், வங்கிக் கணக்கு , டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை உள்பட அனைத்து தகவல்களையும் அடக்கிய குடியுரிமை அட்டையை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார் அமித் ஷா.
இதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறிய அவர் வரும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு தயார் செய்யும் பணிகள் 12,000 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் குறிப்பிட்டார். அமித்ஷாவின் இந்த புதிய நோக்கிலான யோசனை அனைத்து தரப்பு மக்களாலும் வரவேற்கப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களில் அரசியலுக்கும் அப்பாற்பட்டு அனைவரும் இந்த யோசனைக்கு வரவேற்பை தெரிவித்து வருகின்றனர்.
2021-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி முதல் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடத்தப்படவுள்ளன. ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய பனிப்பிரதேச மாநிலங்களில் முன்னதாக 2020-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.16 இந்திய மொழிகளில் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளனர் . இந்தப் பணிகளுக்காக ரூ.12,000 கோடி செலவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளை முடுக்கிவிட்டு வருகிறது.
https://tamil.news18.com/news/national/amit-shahs-next-idea-now-its-identity-card-pv-208757.html