Kathir News
Begin typing your search above and press return to search.

புதிய ஒப்பந்தம் மூலம் ஒரு லட்சம் டன் பொட்டாசியம் இந்தியாவுக்கு கிடைக்கும் - மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் அறிவிப்பு

புதிய ஒப்பந்தம் மூலம் ஒரு லட்சம் டன் பொட்டாசியம் இந்தியாவுக்கு கிடைக்கும் என்று மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய ஒப்பந்தம் மூலம் ஒரு லட்சம் டன் பொட்டாசியம் இந்தியாவுக்கு கிடைக்கும் - மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் அறிவிப்பு

KarthigaBy : Karthiga

  |  12 Oct 2022 7:00 AM GMT

விவசாயிகளுக்கு தடை இன்றி உரம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உள்நாட்டு உர உற்பத்தியை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.இந்த நிலையில் இந்தியாவின் ராஷ்டிரிய ரசாயனம் மற்றும் ஒரு நிறுவனம் ஜெர்மனியின் கே.பிளஸ் எஸ்.மினரல்ஸ் அண்ட் அக்ரிகல்ச்சர் நிறுவனத்தின் உப நிறுவனமான கே பிளஸ் எஸ்.மிடில் ஈஸ்ட் நிறுவனம் ஆகியவற்றிற்கு இடையே சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த ஒப்பந்தம் கலப்பு உரங்களின் பல்வேறு நிலையிலான உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் விவசாயிகளுக்கு எம்.ஓ. பி உரம் கிடைப்பதை மேம்படுத்தவும் வகை செய்கிறது.உர உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடுகளுடன் நீண்ட கால நட்புறவுக்கு வழிவகை செய்கிறது. மேலும் உரம் மற்றும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதை நம்பியிருக்கும் இந்தியா, உள்நாட்டிலேயே அவற்றை உற்பத்தி செய்வதன் மூலம் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் நிலையான விலையை பராமரிக்கவும் இது உதவும்.


இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கே பிளஸ் நிறுவனம் ஆண்டுக்கு ஒரு லட்சத்து ஐந்தாயிரம் டன் பொட்டாசியம் உரங்களை 2022 ஆம் ஆண்டு முதல் 2025 ஆண்டு வரை சப்ளை செய்யும் என மத்திய ரசாயணம் மற்றும் உரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பாராட்டியுள்ளார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News