Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரே சமயத்தில் 3 அரசுப் பணிகளில், 30 ஆண்டுகளாக ஏமாற்றி சம்பளம் வாங்கிய ஆசாமி !! சட்டையைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தியது மத்திய நிதி அமைச்சகம்!!

ஒரே சமயத்தில் 3 அரசுப் பணிகளில், 30 ஆண்டுகளாக ஏமாற்றி சம்பளம் வாங்கிய ஆசாமி !! சட்டையைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தியது மத்திய நிதி அமைச்சகம்!!

ஒரே சமயத்தில் 3 அரசுப் பணிகளில், 30 ஆண்டுகளாக ஏமாற்றி சம்பளம் வாங்கிய ஆசாமி !! சட்டையைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தியது மத்திய நிதி அமைச்சகம்!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Aug 2019 8:53 AM GMT



இந்தியாவில் அரசுப்பணி என்பது பலருக்கும் கனவாக உள்ளது. அரசுப்பணியை இலக்காக கொண்டு பலரும் உயிரைக் கொடுத்து படித்து வருகின்றனர். போட்டித்தேர்வுகளில் பங்கேற்பவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஒரே ஆள் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றி 30 ஆண்டுகளாக சம்பளமும் பெற்ற சம்பவம் நடந்துள்ளது.


சமீபத்தில் மத்திய நிதி அமைச்சகம் ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை முறையை கொண்டு வந்த போது பீகார் மாநிலம் கிருஷ்ணகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் ராம் மூன்று வெவ்வேறு அரசுத் துறைகளில் வேலை பார்த்துக் கொண்டே சம்பளம் வாங்கிக் கொண்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது.


அரசுத்துறைகளில் ஒரே பெயர் கொண்ட நபர் பணியாற்றுவது இயல்பானது என்றாலும், ஒரே பெயர், ஒரே விலாசம் இருந்துள்ளது. இதனால்,சம்பந்தப்பட்ட சுரேஷ் ராமை தகுந்த ஆதாரங்களுடனும் ஆவணங்களுடனும் வந்து உயரதிகாரிகள் சந்திக்கச் சொல்லி இருக்கிறார்கள். வெறும் பான் கார்டு, ஆதார் கார்டுடன் சுரேஷ் ராம் அவர்களை சென்று சந்தித்துள்ளார். இதனை அடுத்து, பணி தொடர்பான ஆவணங்களை எடுத்து வரச்சொல்லி அனுப்பியுள்ளனர்.


உஷாரன சுரேஷ் ராம், தலைமறைவானார். இதனை அடுத்து, போலீசார் மூலம் அவர் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு தற்போது விசாரணையை எதிர்கொண்டுள்ளார். பீகார் மாநில அரசின் பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளர், பங்கா எனும் மாவட்டத்தில் நீர் மேலாண்மைத் துறையில் ஒரு அரசு அதிகாரியாகவும், பீம் நகர்ப் பகுதியில் அதே நீர் மேலாண்மை துறையில் அரசு அதிகாரியாகவும் கடந்த 30ஆண்டுகளாக பணியாற்றி சம்பளம் வாங்கியுள்ள சுரேஷ் ராம், பதவி உயர்வுகளையும் பெற்றுள்ளார்.


விசாரணைக்குப் பின்னரே அவர் எப்படி ஏமாற்றி வேலை வாங்கியுள்ளார்; மூன்று அலுவலகத்திலும் ஒரு சேர எப்படி பணியாற்றியுள்ளார் என்ற விபரம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News