Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய அரசு கொண்டுவரவுள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் பயனளிக்கும் - குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் நம்பிக்கை

மத்திய அரசு கொண்டு வரவுள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் நிச்சயம் பயன் அளிக்கும் என்று குஜராத் முதல் மந்திரி பூபேந்திரபடேல் நம்பிக்கை தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டுவரவுள்ள  ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் பயனளிக்கும் - குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் நம்பிக்கை
X

KarthigaBy : Karthiga

  |  16 Feb 2023 10:45 AM GMT

தமிழகத்திலிருந்து குஜராத் சென்றுள்ள பத்திரிகை நிருபர்களுக்கு குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் காந்திநகரில் உள்ள தனது இல்லத்தில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


குஜராத் மாநிலத்தில் நிதி மேலாண்மை சிறப்பான முறையில் கையாளப்பட்டு வருகிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம் . சமூகத்தில் தேவையானவர்களுக்கு மட்டுமே இலவசங்களை நாங்கள் வழங்கி வருகிறோம். இதனால் நிதி பற்றாக்குறை என்பது எங்களுக்கு கிடையாது. பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல் மந்திரி ஆக இருந்தபோது முன்னெடுத்த நடவடிக்கை காரணமாக குஜராத் மின்மிகை மாநிலமாகத் திகழ்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டால் இத்தகைய இலக்கை நாங்கள் அடைந்துள்ளோம். நாங்கள் வளர்ச்சி அடைந்த மாநிலமாக இருந்தாலும் நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.


மத்திய அரசு கொண்டுவரவுள்ள 'ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்' மாநிலங்களுக்கு பயன் அளிக்க கூடியதாக இருக்கும். வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தமிழகத்தில் நான் பிரச்சாரம் செய்வேனா? என்று கேட்கிறார்கள் . தமிழ் பேசத் தெரியாததால் தேர்தல் பிரச்சாரத்திற்கு வர முடியாது .இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது குஜராத் மாநில தலைமை முதன்மை செயலாளர் கைலாசநாதன் , வருவாய்த் துறை செயலாளர் ஸ்வரூப், மாவட்ட கலெக்டர் நாகராஜன் உட்பட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர் . இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News