Kathir News
Begin typing your search above and press return to search.

ஆன்லைன் மூலம் கடன் வாங்கித் தருவதாக மோசடி செய்த பாதகர்கள்: 100க்கும் மேற்பட்டோர் ஏமாற்றம்

ஆன்லைன் மூலம் கடன் தருவதாக கூறி தமிழக முழுவதும் 100க்கும் மேற்பட்டவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆன்லைன் மூலம் கடன் வாங்கித் தருவதாக மோசடி செய்த பாதகர்கள்: 100க்கும் மேற்பட்டோர் ஏமாற்றம்
X

KarthigaBy : Karthiga

  |  5 July 2023 5:15 AM GMT

தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய செல்போனினுக்கு தொடர்பு கொண்ட ஒருவர் உங்களுக்கு ரூபாய் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் கடன் கிடைத்துள்ளது அதற்கான விண்ணப்பத்தை வாட்ஸ் அப்பில் அனுப்புகிறோம். நீங்கள் பூர்த்தி செய்து அனுப்புங்கள் என கூறி அனுப்பி வைத்துள்ளனர் .பிரபல தனியார் நிறுவன லோகோவுடன் ஆன்லைன் மூலம் கடன் தருவதாக அதில் தகவல் இடம் பெற்று இருந்தது .


மேலும் சுரேஷிடம் அவருடைய ஆதார் கார்டு பான் கார்டு வங்கி பரிவர்த்தனை போட்டோ ஆகிய விவரங்களையும் கேட்டுள்ளனர். கடன் கிடைக்க வங்கி கணக்கில் குறைந்தபட்சம் ரூபாய் 25 ஆயிரம் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் கடன் கிடைக்கும் என கூறியுள்ளனர். கடன் தொடர்பாக விசாரணைக்காக ஏ.டி.எம் கார்டின் 16 இலக்கங்கள் ஏ.டி.எம் கார்டின் காலாவதி தேதி, கார்டின் சி.வி.வி ஆகியவற்றை சொல்லுங்கள் எனக் கூறியுள்ளனர்.


இதனை சுரேஷ் அறிவித்தவுடன் அவருடைய செல்போன் எண்ணுக்கு இரண்டு முறை ஓ.டி.டி வந்துள்ளது. அதனை போனில் பேசியவர் கேட்டு வாங்கிக் கொண்டார். சிறிது நேரத்தில் வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 24 ஆயிரத்து 955 எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை பார்த்து சுரேஷ் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சம்பந்தப்பட்ட எண்ணை தொடர்பு கொண்டு ஏன் பணம் எடுத்தீர்கள் எனக் கேட்டபோது இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.


இதனால் சந்தேகமடைந்த சுரேஷ் இது குறித்து தஞ்சை மாவட்டம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க சைபர் கிரைம் குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி சஞ்சய் குமார் சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு தேவராணி சஞ்சய் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்சிஷ் ராதா உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயச்சந்திரன், முத்தமிழ்செல்வன் ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.


இந்த தனிப்படையினர் மோசடி செய்தவர்கள் பேசிய செல்போன் எண்ணைக் கொண்டு கண்காணித்தனர். அப்போது அந்த எண்ணில் இருந்து பேசியவர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து பேசியது தெரிய வந்தது. விசாரணை நடத்தினர். அப்போது மோசடியில் ஈடுபட்டது நாகை மாவட்டம் மேலக்கோட்டை வாசல் நடராஜர் தெருவை சேர்ந்த செல்வம் மகன் கார்த்தீசன், சென்னை வியாசர்பாடி உதயசூரிய நகரை சேர்ந்த முத்துக்குமார் மகன் சுரேஷ் என்பதும் தெரியவந்தது. இதை அடுத்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கோபாலகிருஷ்ணன் என்னை தேடி வருகின்றனர். அவர்களிடமிருந்து 42 செல்போன்கள் 19 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 100க்கும் மேற்பட்ட நபர்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்தது தெரியவந்தது.


SOURCE:DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News