ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: தமிழக கவர்னர் தீவிர ஆய்வு!
ஆன்லைனில் சூதாட்ட தடை மசோதா குறித்து கவர்னர் தீவிர ஆய்வு மேற்கொண்டு இருக்கிறார்.
By : Bharathi Latha
தமிழக கவர்னர் தீவிர ஆய்வு!
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டில் பலரும் ஈடுபட்டு பணத்தை இழந்தனர். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு பலரும் தற்கொலை செய்து கொண்டனர். எனவே ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான வலுவான சட்டத்தை உருவாக்க சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் தலைமையில் குழு அமைத்து புதிய சட்டம் ஏற்றுவது தொடர்பாக அரசு அறிக்கை பெற்றது. அதன்படி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்வதற்கான அவசர சட்டம் இயற்றப்பட்டு கடந்த சட்டம் மாதம் 26 ஆம் தேதி கூடிய அமைச்சரவை முன்பு கொண்டுவரப்பட்டது.
அதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்ததை தொடர்ந்து கவர்னரின் ஒப்புதலுக்காக இம்மாதம் ஒன்றாம் தேதி கவர்னர் அலுவலகத்திற்கு அரசு அதை அனுப்பி வைத்தது. அதை அவசரச் சட்டத்தை கவர்னர் ரவி அன்றைய தினமே பரிசீலனைக்கு உடனடியாக ஒப்புதல் அளித்த அரசுக்கு அனுப்பி வைத்தார். மேலும் கடந்த 19ஆம் தேதி அன்று இந்த அவசரச் சட்டத்தை நிரந்தரச் சட்டமாக்குவது குறித்து சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து கவர்னர் ஒப்புதலுக்காக அந்த சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை செய்யும் நிரந்தர சட்டம் தமிழகத்தில் அமலுக்கு வரும். இது பற்றி கவர்னர் அலுவலகத்தில் இந்த மசோதா நேற்று முன் தினம் மாலை தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா பற்றி கவர்னர் ரவி தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
Input & Image courtesy: Oneindia News