Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடியால் மட்டுமே நிகழ்ந்த சாத்தியம்: பின்னணி என்ன?

ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வு இந்தியாவின் ஒவ்வொருவரையும் ஒன்றிணைக்கிறது.

பிரதமர் மோடியால் மட்டுமே நிகழ்ந்த சாத்தியம்: பின்னணி என்ன?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  24 Jan 2023 1:58 PM GMT

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் வரலாற்றுச் சிறப்பை நினைவில் கொள்ளும் வகையிலும், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பெருமைகளை உணர்வதற்கும் ரோஸ் தீவிற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என்று பிரதமர் 2018-ல் அங்கு பயணம் மேற்கொண்ட போது பெயர் மாற்றம் செய்தார். நெய்ல் தீவு மற்றும் ஹாவ்லாக் தீவு போன்றவற்றுக்கு ஷாஹித் தீவு மற்றும் சுராஜ் தீவும் என்றும் மறு பெயர் சூட்டப்பட்டது. நம் நாட்டின் நிகழ்கால பராக்ரமசாலிகளுக்கு உரிய மரியாதை வழங்குவதற்கு நமது பிரதமர் முனைப்போடு செயல்பட்டு வருகிறார்.


இந்த உணர்வை மனதில் ஏந்தியே அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு, 21 பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை வைப்பதற்கு பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த்த் தீவுகளில் மிகப் பெரிய தீவிற்கு முதல் முறையாக பரம்வீர் சக்ரா விருது பெற்ற வீர்ரின் பெயரும் இரண்டாவது பெரிய தீவிற்கு 2-வது முறையாக பரம்வீர் சக்ரா விருது பெற்ற வீரரின் பெயரும் சூட்டப்பட்டு இந்த வகையில், அனைத்து 21 தீவுகளுக்கும் பெயரிடப்படும். நமது நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையைக் காப்பதற்கு தன்னுயிர் வழங்கிய நமது வீரர்களுக்கு என்றென்றும் மரியாதை செலுத்தும் வகையில் இது அமையும்.


பெயரிடப்படாத இந்தத் தீவுகளுக்கு 21 பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களான மேஜர் சோம்நாத் சர்மா, சுபேதார் மற்றும் ராணுவ தளபதி கரம்சிங், 2-வது லெஃப்டினென்ட் ஜெனரல் ராமரகோப ரானே, நாயக் ஜதுநாத் சிங், கம்பெனி ஹவில்தார் மேஜர் பிரு சிங் ஆகிய பரம்வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News