வெத்து சீன் உதய் அண்ணே! உண்மையை உளறிய பொக்லைன் ஆப்ரேட்டர்
வெத்து சீன் உதய் அண்ணே! உண்மையை உளறிய பொக்லைன் ஆப்ரேட்டர்
By : Kathir Webdesk
உதய் அண்ணன் தி.மு.கவில் தன்னை முன்னிலைப்படுத்துவதற்கு இளைஞர் அணிக்கு ஒரு உத்தரவு பிறப்பித்தார் அரசு தூர்வாரத நீர் நிலைகளை திமுக இளைஞர் அணியினர் தூர்வாரி சீரமைப்பர் என்பதுதான் அந்த அறிவிப்பு.
இளைஞர் அணி நிர்வாகிகள் கையில் கழுத்தில் இருந்ததையெல்லாம் அடகு வைத்து குளத்தை தூர்வாரும் தொடக்க நிகழ்ச்சியை நடத்துகின்றனர், நம்ம உதய் சார் சினிமா சூட்டிங்குக்கு வருவது போல் வந்து ஊர் மக்கள் மத்தியில் போய் குளத்தை தூர் வரும் நிகழ்ச்சியில் போட்டோக்கு போஸ் கொடுக்கிறார் அதுவும் சிவப்பு கம்பளம் விரித்தாதான் வருவேன் என்கிறாராம் உதய் அண்ணே இப்படி சீன் போட்டு வந்த உதயநிதிக்கு ஆப்பு வைத்தார் பொக்லைன் ஆபரேட்டர்.
நெடுங்கூரில் கோவில் குளத்தை தூர் வரும் பணியை தொடங்கி வைத்து விட்டு தி.மு.க வினர் புறப்பட்ட சில மணி நேரத்தில் குளத்தில் தூர் வரி கொண்டிருந்த பொக்லைன் இயந்திரம் புறப்பட்டு சென்றது. ஏன் தூர் வராமல் கிளம்புகிறீகள் என கேட்டபோது தூர் வரும் தொடக்க நிகழ்ச்சிக்கு மட்டுமே வர சொன்னார்கள், அதான் வந்தேன் தற்போது அது முடிந்தது,எனக்கு வேறு இடத்தில வேலை இருக்கிறது அங்கு செல்கிறேன் என்றார். ஆபரேட்டர். இந்த குளத்தை யார் தூர் வார வருவார்கள் என எனக்கு தெரியாது என சொன்னபடி கிளம்பினார் பொக்லைன் ஆபரேட்டர்.
உதயநிதிக்கு வரவேற்பு செலவு பண்ணதுக்கு 10 குளங்களை தூர் வரி இருக்கலாம் என காட்டமாய் உள்ளனர் அப்பகுதி மக்கள் நெட்டிசன்களும் உதயநிதியை விடுவதாய் இல்லை
குளங்களை தூர்வாருகிறேன்.. தூர்வாருகிறேன்.. என உதயநிதி ஸ்டாலின் விளம்பரத்திற்கு செலவு செய்தது தான் அதிகம். இப்ப பாருங்களேன், உண்மையாகவே தூர்வாருவதெல்லாம் திட்டமில்லையாம். வெறுமனே தூர்வாரப்படும் என துவக்க நிகழ்ச்சி மட்டும் ஜோராக கொண்டாடப்படும். உண்மையை போட்டு உடைத்திருக்கிறார்கள்.