Kathir News
Begin typing your search above and press return to search.

#Opinion: தலைவலியாக மாறிய பாகிஸ்தான்? கழற்றி விடப்போகிறதா சீனா? - என்ன நடந்தது?

இந்தியா வளர்ந்து வரும் சக்தியாகவும், மேற்கு ஆசியாவில் போதுமான இராஜதந்திர திறன்களையும் கொண்டுள்ளது. ஆனால், சீனா பயங்கரவாத நாடான பாகிஸ்தானை ஈரானுக்காக கழற்றி விட்டால், பாகிஸ்தான் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளும் படி நேரிடும்

#Opinion: தலைவலியாக மாறிய பாகிஸ்தான்? கழற்றி விடப்போகிறதா சீனா? - என்ன நடந்தது?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 July 2020 7:12 AM GMT

ஈரான் சபஹர்-ஜாகேதன் ரயில் திட்டத்திலிருந்து இந்தியாவை 'வெளியேற்றி விட்டார்கள்' என்று இஷ்டத்துக்கும் பாகிஸ்தான் கதைகட்டி வருகிறது. பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி இந்தியாவின் "தவறான கொள்கைகள்" காரணமாக, முக்கிய ரயில் திட்டத்திலிருந்து விலக்கப்பட்டதாக கூறினார். "இந்துத்துவ மனப்பான்மை" காரணமாக இந்தியா தனது உறவுகளை கெடுத்து வருவதாக ஒரு பயங்கரவாத நாட்டின் வெளியுறவு அமைச்சர் கூறினார்.

குரேஷியின் கூற்றுக்கள் மிக மிக தவறானவை. சபாஹார் திட்ட விவகாரத்தில் இந்தியாவுடன் இன்னும் ஈடுபட்டு வருவதாக ஈரான் மிகவும் தெளிவாக தெரிவித்துள்ளது. இதற்கிடையில், சீன தலையீடு காரணமாக ஈரானில் இந்தியாவின் பங்கைக் குறைத்ததாகக் கதை கட்டி பாகிஸ்தான் போன வாரம் கொண்டாடியது. ஆனால் சீனாவின் செல்வாக்கு ஈரானில் அதிகரித்து வருவது பாகிஸ்தானுக்கு நல்லதல்ல என்பதை இம்ரான் கான் அரசாங்கம் உணரத் தவறிவிட்டது.

பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது ஈரான் பரவாயில்லை என்பதை சீனா உணர்ந்துள்ளது. பாரசீக வளைகுடா வழியாக இந்தியப் பெருங்கடலுடன் நேரடி இணைப்பை வழங்குவதால் சீனா, ஈரானில் முதலீடு செய்ய விரும்புகிறது. இந்த கோணத்தில் பார்த்தால் , பாகிஸ்தான் ஈரானை விட சமமான, அல்லது உண்மையில் குறைந்த மூலோபாய (strategic) மதிப்பைக் கொண்டுள்ளது.

ஈரானிய துறைமுகங்கள் உலகின் மிக முக்கியமான எண்ணெய் மையங்களுடன் நெருக்கமாக உள்ளன - உதாரணம் ஹார்முஸ் ஜலசந்தி, இது சீனாவுக்கு கூடுதல் நன்மையை அளிக்கிறது. புவியியல் ரீதியாகவும், ஈரான் பாகிஸ்தானை விட சற்று சிறந்த நிலையில் உள்ளது.

மேலும், ஒரு நடைமுறையாக பார்த்தாலும் ஈரான் பாகிஸ்தானை விட சிறந்த தேர்வில் உள்ளது. தங்கள் சுதந்திரத்திற்காக பலுச்சிஸ்தானில் ஆயுதம் ஏந்திப் போராடும் பலூச் வீரர்கள் மற்றும் கில்கிட்-பால்டிஸ்தான் குறித்து இந்தியாவின் வளர்ந்து வரும் உறுதிப்பாடு காரணமாக சீனா-பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத் திட்டமும் ஆபத்தில் உள்ளது. பாகிஸ்தானில் சீனாவின் முக்கிய முதலீடு 62 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள CPEC , இது ஜி ஜின்பிங்கின் முக்கியத் திட்டமான BRIயின் ஒரு பகுதியாகும்.

சீனாவின் ஆக்கிரமிப்பு சின்ஜியாங்கிலிருந்து இந்த CPEC ஆரம்பித்து, தற்போது பாகிஸ்தான் இராணுவத்தின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும் கில்கிட்-பால்டிஸ்தானின் இந்தியப் பகுதி வழியாகச் சென்று, இறுதியாக பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் வழியாக, சீனாவை குவாடர் துறைமுகத்துடன் இணைக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும், கில்கிட்-பால்டிஸ்தானை மீட்டெடுப்பதில் இந்தியா உறுதியாக இருப்பதால் CPEC அந்தரத்தில் தொங்குகிறது. இந்தியா தன் பகுதியை மீட்டெடுத்தவுடன், CPEC தானே செயல்படாது.

மேலும், பலூசிஸ்தான் மாகாணத்தில் சீன நலன்களும், முதலீடுகளும் பலூச் சுதந்திர போராளிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. முன்னதாக, பலுசிஸ்தானை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்க விரும்பும் பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA), பாகிஸ்தான் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பாகிஸ்தான் பஞ்சாபி குடியேறிகள் அல்லது ஆக்கிரமிப்பாளர்களைத் தாக்குவார்கள். ஆனால் இப்போது அவர்கள் சீன நாட்டினரையும் குறிவைக்கத் தொடங்கியுள்ளனர்.

உண்மையில் CPEC முதலீடுகளின் முக்கிய பொருளான குவாடரில் கூட BLA தாக்குதல்கள் நடத்தியிருக்கிறது. பலூச் சுதந்திர போராளிகள் இப்போது சீனர்களை உண்மையான ஆக்கிரமிப்பு சக்தியாக கருதுகின்றனர், அதனால்தான் அவர்கள் சீன முதலீடுகளைத் தாக்கத் தொடங்கியுள்ளனர்.

ஈரான் ஒரு தொந்தரவான நாடாக இருக்கலாம், ஆனால் குறைந்தபட்சம் தன் நாட்டை சுற்றி எல்லைப் பிரச்சனைகள் அதற்கு இல்லை. மறுபுறம், பாக்கிஸ்தான் பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களைக் கொண்டுள்ளது, அங்கு இராணுவ மோதல்கள் அல்லது விடுதலைப் போராட்டங்கள் காரணமாக முதலீடுகள் தொடர்ந்து பாதிக்கப்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன.

மேலும், ஈரான் எண்ணெய் வளம் நிறைந்த நாடு, ஈரானிய எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடு சீனா. 25 ஆண்டுகால சீன-ஈரானிய மூலோபாய கூட்டாண்மைக்கான வரைபடத்தின் படி, ஈரானிய எரிவாயு, எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் தயாரிப்புகளின் வளர்ச்சியில் சீனா 280 பில்லியன் டாலர் முதலீடு செய்யலாம் என எதிர்பார்க்கிறது.

கடனில் மூழ்கியுள்ள பாகிஸ்தான் தனது பிராந்தியங்களை சீனாவுக்கு விற்கும் திட்டத்தை தவிர வேறு என்ன வழங்க முடியும்?

மீண்டும், பாகிஸ்தானின் அரசியல் சமன்பாடுகள் வெளிநாட்டு முதலீட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் ஒன்று. சிவில் அரசாங்கத்திற்கும் பாகிஸ்தான் இராணுவம் / ISI க்கும் இடையிலான உறவுகள் சிக்கலானதாகவே இருக்கின்றன. இம்ரான் கான் உண்மையில் பாகிஸ்தானை வழிநடத்தும் மனிதர் அல்ல, பாகிஸ்தான் இராணுவம் / ISI யின் தலையீடு CPEC யில் விரிவான ஊழல் நடப்பதை அம்பலப்படுத்துகிறது.

சீனா-பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத்தில் (CPEC) முதலீடு செய்த 62 பில்லியன் டாலர்களை விட ஆறு மடங்கு அதிகமாக, ஈரானில் 400 பில்லியன் டாலர்களை ஏன் முதலீடு செய்ய சீனா விரும்புகிறது என்பதை இந்த காரணிகள் அனைத்தும் விளக்குகின்றன.

சபாஹர் ரயில் திட்டத்தில் இருந்து இந்தியா வெளியேற்றப்படுவதாக போலிக் கதைகள் கூறி கொண்டாடுவதற்கு முன்பு, பாகிஸ்தான் தனது சொந்த நாட்டின் நலன்கள் பாதிக்கப்படுவதாகக் கருத வேண்டும். இந்தியா வளர்ந்து வரும் சக்தியாகவும், மேற்கு ஆசியாவில் போதுமான இராஜதந்திர திறன்களையும் கொண்டுள்ளது. ஆனால், சீனா பயங்கரவாத நாடான பாகிஸ்தானை ஈரானுக்காக கழற்றி விட்டால், பாகிஸ்தான் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளும் படி நேரிடும்.

Translated From: TFI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News