Kathir News
Begin typing your search above and press return to search.

#Opinion: சீனாவின் திட்டம் என்ன? சீனப் பிரச்சார வலையில் சிக்காமல் இருப்பது எந்த அளவு முக்கியம்? #IndiaChina

#Opinion: சீனாவின் திட்டம் என்ன? சீனப் பிரச்சார வலையில் சிக்காமல் இருப்பது எந்த அளவு முக்கியம்? #IndiaChina

#Opinion: சீனாவின் திட்டம் என்ன? சீனப் பிரச்சார வலையில் சிக்காமல்  இருப்பது எந்த அளவு முக்கியம்? #IndiaChina

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Jun 2020 1:27 AM GMT

லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கில் அண்மையில் ஏற்பட்ட மோதலில் இந்தியா 20 வீரர்களை இழந்த பிறகு, அடுத்த நாள் வெளிவந்த நியூயார்க் டைம்ஸ் செய்தி சீனாவை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்ததாக குற்றம் சாட்டவில்லை. மாறாக, அது வேறு வழியில் சென்று இந்தியா மோதலைத் தூண்டுவதாக குற்றம் சாட்டியது.

எப்படி? நியூயார்க் டைம்ஸ், சீனா கூறுவதைப் போல இந்தியா LAC யைக் கடந்து சீனாவைத் தாக்கியது என்று குற்றம் சாட்டியதா?

இல்லவே இல்லை. நியூயார்க் டைம்ஸ் வேறு வழியில் சென்றது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2019 ஆகஸ்டில் 370 வது பிரிவை ரத்து செய்தபோது நிகழ்த்திய தனது உரையின் போது சீனர்களைத் தூண்டிவிட்டதால் இந்த மோதல் நிகழ்ந்தது என்று அது கூறியது.

2019 ஆகஸ்டில் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டபோது பெரும்பாலான இந்தியர்கள் சீனாவைப் பற்றி யோசிக்கக் கூட இல்லை. மேலும் இந்தியா தொடர்ந்து அக்சாய் சின் நம்முடையது என்று பல காலமாய் கூறி வருகிறது. ஆனால் இந்த விபரீதமான வாதம் இப்போது எல்லா இடங்களிலும் தென்படுகிறது. நியூயார்க் டைம்ஸ் போன்ற உலகப் பத்திரிகைகள், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், 'தனிப்பட்ட' இராணுவ ஆய்வாளர்கள் மற்றும் அவர்களின் இணைய அல்லக்கைகள் மூலம் தொடர்ந்து முன் வைக்கப்படுகிறது. சீனா தற்காப்புக்காக செயல்பட்டது போலவும், இந்தியா தான் சீனாவை தூண்டி விட்டதாகவும் இதன் கருத்துகள் இருந்தன.

ஜூன் 2020 க்கு முன்னர் இந்த வாதம் முன்வைக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் தர முடியுமா? ஒருவேளை ஆகஸ்ட் 2019 லாவது? இல்லை!

இத்தனை பேரும், சுயாதீனமாக செயல்பட்டு, ஒரே நேரத்தில் இந்த ஒரே முடிவுக்கு வந்தனர். அதுவும் சீனாவுக்கு மிகவும் வசதியான நேரத்தில். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பொதுமக்கள் கருத்தை திரிக்கும் வழிமுறைகள் மற்றும் நோக்கங்களைக் கொண்ட ஒரு சர்வாதிகார வல்லரசான சீனாவுக்கு வசதியான நேரத்தில். இது ஒரு 'தற்செயல்' நிகழ்வுதான். அதை நாமும் நம்பலாம்.

இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் சீனாவின் 'பங்களிப்பு' பற்றி சிந்திக்கத் தொடங்க வேண்டிய நேரம் இது.

எப்படி? முதலில், சீனா என்ன விரும்புகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கிழக்கு லடாக்கில் இருந்து இந்தியாவின் முக்கியப் பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்தல் உட்பட பல உடனடி இலக்குகளை அவர்கள் கொண்டுள்ளனர் என்பது தெளிவு. ஆனால் உண்மையான, நீண்ட கால நோக்கம் என்ன?

சீனா உலகில் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறது. அதற்காக, அவர்கள் முதலில் தங்கள் சொந்தக் கொல்லைப்புறத்தில் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.

ஒரு கணம், சீனாவின் ராஜதந்திரியாக உங்களை நினைத்துப் பாருங்கள். நீங்கள் உலக ஆதிக்கத்திற்கான ஒரு மாஸ்டர் திட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறீர்கள். உங்களுக்கு என்ன தெரிகிறது? சீனாவின் கிழக்கு கடற்கரை ஜப்பான், கொரியா மற்றும் தைவான் போன்ற விரோத நாடுகளால் சூழப்பட்டுள்ளது, அமெரிக்க கடற்படை தொடர்ந்து நீரில் ரோந்து செல்கிறது. அது எவ்வளவு எரிச்சலூட்டுவதாக இருக்கும் என்று சிந்தியுங்கள்.

பின்னர், நீங்கள் தெற்கே இந்தியாவைப் பார்க்கிறீர்கள். நிச்சயமாக, இந்தியா அமெரிக்காவைப் போல சக்திவாய்ந்ததல்ல, ஆயினும்கூட இது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாகும். நீங்கள் புவியியலை மாற்ற முடியாது என்பதால், இந்தியா எப்போதும் சீனாவின் தெற்கே அமைந்திருக்கும். இந்தியா சீனாவுக்கு அடிபணியாவிட்டால், சீனர்கள் ஒருபோதும் உண்மையான வல்லரசாக மாற மாட்டார்கள்.

ஆனால் இந்தியா இன்று அல்லது எதிர்காலத்தில் ஏன் சீனாவுக்கு அடிபணிய வேண்டும்? பத்து ஆண்டுகளில், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும்.

சீனா எதிர்கொள்ளும் பிரச்சினை இதுதான். சீனாவின் அனைத்து லட்சியங்களும் இந்தியா எனும் ஒரே பாறையில் மோதித் தடுத்து நிறுத்தப்படுகிறது.

ஒரே ஒரு தீர்வு இருக்கிறது. சீன, இந்தியாவின் சில பகுதிகளைக் கைப்பற்றினால் போதாது. சீன சக்தியை ஒருபோதும் சவால் செய்ய முடியாத அளவுக்கு இந்தியாவை மிகச் சிறியதாக, துண்டுகளாக உடைக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சீனாவுக்கு "பாரத் கே துக்டே" தேவை. (JNU 'புரட்சியாளர்கள்' ஆசைப்படி)

சீனா இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பிரச்சினைக்குரிய விஷயங்களையும் கண்டுபிடித்து நம் நாட்டை கிழிக்க வேண்டும் என விரும்புகிறது. இங்கே பத்து வயதுக்கு மேற்பட்ட ஒரு கட்டுரையைப் பாப்போம்.சீனாவின் சிந்தனைக் குழுவைப் பற்றிய 2009 கட்டுரையில் இருந்து நேரடிப் பகுதிகள்:

"ஏப்ரல் 8 ஆம் தேதி iiss.cn (மூலோபாய ( Strategic) ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனம்) என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது, இக்கட்டுரை இந்தியாவை உடைப்பதற்கான ஒரு பாதையை விவரித்தது. இந்தியாவைப் பிளவுபடுத்த, நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பூட்டான் போன்ற நாடுகளை சீனா தன் கைகளுக்குள் கொண்டு வரலாம், அசாமின் சுதந்திரத்திற்கான இலக்கை அடைவதில் உல்ஃபாவை ஆதரிக்கலாம், தமிழர்கள் மற்றும் நாகாக்கள் போன்றவர்களின் லட்சியங்களை ஆதரிக்கலாம், மேற்கு வங்காளத்தை விடுவிக்க பங்களாதேஷை ஊக்குவிக்கலாம் கடைசியாக தெற்கு திபெத்தில் 90,000 சதுர கி.மீ நிலப்பரப்பை மீட்டெடுக்கலாம் என அந்தக் கட்டுரை கூறியது.

ஒரு தேசமாக இந்தியா வரலாற்றில் உண்மையில் இருந்ததில்லை என்று கட்டுரை கூறியது. சாதி மற்றும் சுரண்டலை ஊக்குவிக்கும் இழிவான இந்து மதத்தால் இது ஒன்றாக இருப்பதாகவும் கூறுகிறது.

சீனா தனது சொந்த நலனுக்காகவும், முழு ஆசியாவின் முன்னேற்றத்துக்காகவும் அசாமி, தமிழர்கள் மற்றும் காஷ்மீர் போன்ற பல்வேறு தேசிய இனங்களுடன் சேர வேண்டும்… "

நீங்கள் குழப்பமடைந்துவிட்டால், இது 2014 க்குப் பிறகு வந்த செய்தி இணையதளத்தில் இந்திய "வரலாற்றாசிரியர்" எழுதியதல்ல. இது 2009 ஆம் ஆண்டு சீன சிந்தனைக் குழுவிலிருந்து வந்தது. அப்போது மோடியும் இல்லை, ஷாவும் இந்தியாவை ஆளவில்லை. நீங்கள் மோடிக்கு எதிரான ஒரு தாராளவாதியாக இருந்தாலும், விழித்திருங்கள். இது மோடியைப் பற்றியது அல்ல. இது எனது நாட்டைப் பற்றியது, இது உங்கள் நாடும் கூட.

இப்போது நேர்மையாக சொல்லுங்கள். இந்திய தாராளவாதிகள் பின்பற்றும் பாதை இதுவல்லவா?

பாரத் கே துக்தே.

அந்த முழக்கம் நகைச்சுவையல்ல. இது சில இடதுசாரி கல்லூரி வளாகத்தின் திடீர் கோபத்தில் சொன்ன ஒன்று அல்ல. அந்த முழக்கம் இந்த நோக்கத்தின் மிக உரத்த கூற்று. நம் கண்களையும் காதுகளையும் திறக்க வேண்டும்.

CAA க்கு எதிராக, 370 வது பிரிவை ரத்து செய்வதற்கு எதிராக, கடந்த 9 மாதங்களில், இந்தியா கண்ட ஒவ்வொரு போராட்டத்தையும் இப்போது உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் ஒவ்வொரு முறையும் இந்தியாவை நாஜி அரசுடன் ஒப்பிட்டதை யோசித்துப் பாருங்கள். அவர்கள் உண்மையில் எதிர்ப்பாளர்களாக மட்டும் இருந்தார்களா? அல்லது அவர்கள் வேண்டுமென்றே ஒரு திட்டத்திற்கு வேலை செய்தார்களா?

யாரோ கர்ப்பமாக இருப்பதை நீங்கள் கேள்விப்பட்டீர்கள். அதே நபர் காஷ்மீர், பஞ்சாப் மற்றும் டெல்லியின் இரத்தத்திற்காக கோஷமிடுவதை நீங்கள் கேட்டீர்களா? இப்போது சீன சிந்தனைக் குழுவிலிருந்து எழுதிய கட்டுரையை மீண்டும் படியுங்கள். நீங்கள் இன்னும் அவளுக்காக வருத்தப்படுகிறீர்களா?

விஷயம் என்னவென்றால்: தேச விரோத சக்திகள் நம்மைப் போலவே மனித உடல்களை கொண்டுள்ளன. அவர்களுக்கு வயதாகலாம், பலவீனமானமாகலாம், அவர்கள் கர்ப்பமாகலாம். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தந்தை மற்றும் ஒரு தாய் உள்ளனர், அவர்களில் ஒருவர் எங்காவது ஒரு பள்ளி முதல்வராக இருக்கலாம். தேச விரோதிகள் நன்கு படித்தவர்களாக இருக்கலாம், கலை அல்லது விளையாட்டு அல்லது வீடியோ கேம்களுக்கான ஆர்வத்தையும் கொண்டிருக்கலாம். ஹிட்லர் ஒரு ஓவியர். அதற்காக அவர் வில்லன் இல்லையா?

இந்த தேச விரோதிகள் காவல்துறையினரால் கைது செய்யப்படும் போதெல்லாம், அவை இந்த மனிதநேய பண்புகளுக்கு பின்னால் ஒளிந்து கொள்கின்றன. அவர்களை விட வேண்டாம். அவர்கள் உண்மையிலேயே என்ன சொல்கிறார்கள் என்று புரிந்து கொள்ள உங்கள் கண்களையும் காதுகளையும் திறந்தே வைத்திருங்கள்.

அவர்களின் வார்த்தையை அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள். காஷ்மீர் அல்லது அசாமின் இரத்தம் வேண்டும் என்று அவர்கள் கூறும்போது, ​​அவர்கள் பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாதிகளுக்கு உற்சாகம் அளிப்பவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். கொள்கையளவில், இது எளிதாக இருக்க வேண்டும். ஆனால் நமது ஊடகங்கள் அதை வியக்கத்தக்க வகையில் கடினமாக்குகின்றன.

அவர்கள் சொல்வதில் மறைக்கப்பட்ட அர்த்தங்களைத் தேடாதீர்கள். XYZ மக்களை ஆயுதங்கள் எடுக்க அவர்கள் அழைக்கும் போது, ​​அவர்கள் இந்திய அரசை வன்முறையில் தூக்கி எறிய தூண்டுகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். சாக்குகளைத் தேடாதீர்கள், இளமையினால் கண்மூடித்தனமாக அவர்கள் செய்வதாக உங்களையே நீங்கள் முட்டாளாக்கி கொள்ளாதீர்கள். இந்தியாவுக்கு மிகவும் சக்திவாய்ந்த எதிரிகள் உள்ளனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இப்போது ஏன்? நல்ல கேள்வி. ஏனெனில் இந்த வரவிருக்கும் தசாப்தம் இந்தியாவிற்கு மிக முக்கியமானதாகும். 1962 குறித்து நாம் அனைவரும் ஒரு மனநிலையை வைத்திருக்கிறோம், சில சமயங்களில் இந்தியா எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை நாம் உணரவில்லை. நாம் ஏற்கனவே ஐந்தாவது பெரிய பொருளாதாரம். அடுத்த பத்து ஆண்டுகளில் நாம் தப்பிப்பிழைத்தால், சீனாவால் எதையும் செய்ய முடியாத படி, மூன்றாவது பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த நாடாகவும் இருப்போம். சீனர்களைப் பொறுத்தவரை, பத்து ஆண்டுகளில் இந்தியாவைத் தடுக்க முடியாவிட்டால் பின் எப்போதும் முடியாது.

நம் மனதிற்குள் அவர்கள் நடத்தும் பிரச்சாரப் போரை புறக்கணிக்காதீர்கள். ஒவ்வொரு முறையும் நாம் அவர்களின் சிறிய பிரச்சாரத்திற்காக விழும்போது, நம்மில் ஒரு பகுதியை நாம் இழக்கிறோம். அவை நம் எல்லைக்குள் கொஞ்சம் முன்னேறி, நம் மனதை மேலும் ஊடுருவப் பார்க்கிறார்கள். தலைமை ஆசிரியர்களின் மகன்கள், கர்ப்பமாக இருந்தாலும் சரி, இல்லையென்றாலும், தங்கள் மனதை உறுதிப்படுத்தி விட்டனர். நீங்கள் சீனப் பிரச்சாரத்திற்கு வீழாமல் உறுதியுடன் இருக்கிறீர்களா?

Translated From: opIndia

Next Story