Kathir News
Begin typing your search above and press return to search.

குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்களால் என்னை அச்சுறுத்த முடியாது - பிரதமர் மோடி!

குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பவர்களால் என்னை அச்சுறுத்த முடியாது. சட்டவிரோதமாக குடியேறுவதற்கு முடிவு கட்டுவோம் என்று பிரதமர் மோடி கூறினார்.

குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்களால் என்னை அச்சுறுத்த முடியாது - பிரதமர் மோடி!

KarthigaBy : Karthiga

  |  17 April 2024 7:51 AM GMT

பிரதமர் மோடி நேற்று பீகார் மாநிலம் புர்னியா, கயா ஆகிய தொகுதிகளில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

ஓட்டுவங்கி அரசியல்வாதி காரணமாக சீமாஞ்சல் பகுதியில் சட்டவிரோதமாக குடியேறுவதை தாராளமாக அனுமதித்து விட்டார்கள். அதனால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது .இங்கு வாழும் தலித்துகள் மற்றும் ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் பல தடவை தாக்கப்பட்டனர் .அவர்களது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் .மோடியை தடுத்து நிறுத்தவோ அச்சுறுத்தவோ முடியாது.

பா.ஜனதா அரசால் தான் மிகப்பெரிய முடிவுகளை எடுக்க முடியும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். 370-வது பிரிவு நீக்கம் , ராமர் கோவில் கட்டுமானம் ,பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன .அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஊழலுக்கு எதிரான மத்திய அரசு நடவடிக்கை தொடரும். சட்ட விரோதமாக குடியேறுவதற்கு முடிவு கட்டப்படும். நான் ஏழைகள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளுக்கு கடன் பட்டவன்.

அவர்களிடம் இருந்து வளர்ந்தவன் இன்று இருக்கும் நிலைக்கு வந்ததற்கு அரசியல் சட்டமே காரணம். அதற்காக அம்பேத்கர் அளித்த அரசியல் சட்டத்திற்கு கடன் பட்டுள்ளேன். 75வது சுதந்திர தினம் கொண்டாடியதை போல அரசியல் சட்டத்தின் 75வது ஆண்டு விழாவும் இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது .காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டது. அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன .அரசியல் சட்டத்தை சிதைக்க முயன்றனர் .ஒரு குடும்பத்தின் கையில் அதிகாரம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அரசியல் சட்டத்தை சகிக்க இயலாத பொருளாக கருதுகின்றனர். அரசியல் சட்டப்படி நடக்கும் தேர்தலில் முடிவுகளை கூட ஏற்க முடியாது என்று பேச தொடங்கியுள்ளனர். அவர்களின் முயற்சிகளை நாம் ஒற்றுமையாக இருந்து முறியடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


SOURCE :DAILY THANTHI


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News