“இஸ்ரோவில் திறமையானவர்களுக்கு வாய்ப்பும், முன்னுரிமையும் வழங்கப்படும்” - சிவன் அறிவிப்பு!!
“இஸ்ரோவில் திறமையானவர்களுக்கு வாய்ப்பும், முன்னுரிமையும் வழங்கப்படும்” - சிவன் அறிவிப்பு!!
By : Kathir Webdesk
சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் சிவன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
சந்திரயான் 2 தற்போது நீள்வட்ட பாதையில் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இனி வரும் நாட்களில் சந்திரயான் 2-இன் பாதை நீர்வட்டப்பாதையிலிருந்து சுற்றுவட்டப்பாதையாக மாற்றப்படும்.
செப்டம்பர் 7-ஆம் தேதி அதிகாலை 1.55 மணிக்கு சந்திரயான் 2 லேண்டர் நிலவில் தரையிறங்கும். நிலவில் தரையிறங்கும் போது, சந்திரயான் 2-இன் வேகம் முற்றிலுமாக குறைக்கப்படும்.
சந்திரயான் 2 திட்டத்தை தொடர்ந்து, சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இஸ்ரோவில் ஆண், பெண் என்ற வித்தியாசம் கிடையாது. திறமையானவர்களுக்கு வாய்ப்பும், முன்னுரிமையும் வழங்கப்படும்.
இவ்வாறு சிவன் கூறினார்.
சுதந்திரதின விழாவில் இஸ்ரோ தலைவர் சிவனுக்கு விஞ்ஞான ஆராய்ச்சியில் சிறப்பாக செயல்பட்டு வருவதற்காக அப்துல்கலாம் விருது அறிவிக்கப்பட்டது.
ஆனால் சுதந்திர தினத்தன்று அவர், வர இயலாத காரணத்தால் இன்று காலை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பானி பழனிசாமியை இஸ்ரோ தலைவர் சிவன் சந்தித்து அப்துல் கலாம் விருதை பெற்றுக் கொண்டார்.