Kathir News
Begin typing your search above and press return to search.

போலி வீடியோக்களை தடுக்க சமூக வலைதளங்களுக்கு உத்தரவு - மத்திய அரசு நடவடிக்கை!

செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் தயாரிக்கப்படும் போலி வீடியோக்களை தடுக்க சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

போலி வீடியோக்களை தடுக்க சமூக வலைதளங்களுக்கு உத்தரவு - மத்திய அரசு நடவடிக்கை!
X

KarthigaBy : Karthiga

  |  27 Dec 2023 3:45 AM GMT

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோகளில் மற்றவர்களின் உடலில் பிரபலங்களின் முகத்தை பொருத்தி போலி வீடியோக்கள் தயாரிக்கப்படுகின்றன.இவை 'டீப் பேக்ஸ்' என்று அழைக்கப்படுகின்றன. நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப் ,கஜோல் ஆகியோர் பற்றிய போலி வீடியோக்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தினர் .பிரதமர் மோடியை சித்தரிக்கும் போலி வீடியோவும் வெளியானது .


இந்த தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக சமூக வலைத்தள நிறுவனங்களுடன் மத்திய மந்திரி ராஜு சந்திரசேகர் ஆலோசனை நடத்தி வந்தார். இந்நிலையில் போலி வீடியோக்களை தடுக்க டிஜிட்டல் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவுகளை பிதப்பிள்ளது. அந்த நிறுவனங்களுக்கு மத்திய மிண்ணனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது :-


நடைமுறையில் உள்ள தகவல் தொடர்பு விதிமுறைகளுக்கு சமூக வலைதள நிறுவனங்களும் டிஜிட்டல் ஊடகங்களும் கட்டுப்பட வேண்டும் .தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் என்னென்ன படங்கள் வீடியோக்கள் தடை செய்யப்பட்டுள்ளதோ அவற்றை பயனர்களுக்கு தெளிவாகவும் துல்லியமாகவும் தெரிவிப்பது கட்டாயமாகும். ப


பயனர் ஒப்பந்தங்களிலோ பயனர் முதல்முறையாக தனது பெயரில் சமூக வலைதள கணக்கு தொடங்கும் போதோ, ஒவ்வொரு தடவை கணக்கை பயன்படுத்தும் போதோ, தகவல் பகிர்ந்து கொள்ளும் போதோ, பயனர்களுக்கு விருப்பமான மொழியில் அதை தெரிவிப்பது கட்டாயம் .இந்த விதிமுறைகளை மீறினால் அளிக்கப்படும் தண்டனை குறித்த சட்டப்பிரிவுகளையும் பயனர்களுக்கு சமூக வலைதளங்கள் தெரியப்படுத்த வேண்டும் .


சட்ட விதி மீறல் குறித்து போலீசாரிடமும் தகவல் தெரிவிப்பது சமூக வலைதளங்களின் கடமை என்பதை பயனர் ஒப்பந்தங்களில் குறிப்பிட வேண்டும். தடை செய்யப்பட்ட படங்கள், வீடியோக்களை பயனர்கள் பதிவேற்றம் செய்வதையும் ,காட்சிப்படுத்துவதையும் பகிர்வதையும் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது சமூக வலைதளங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களின் கடமையாகும் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News