Kathir News
Begin typing your search above and press return to search.

'ஒரே வாகனம் , ஒரே பாஸ்டேக்' திட்டம் -நாடு முழுவதும் அமலுக்கு வந்தது!

நாடு முழுவதும் 'ஒரே வாகனம், ஒரே பாஸ்டேக் திட்டம்' அமலுக்கு வந்தது.

ஒரே வாகனம் , ஒரே பாஸ்டேக் திட்டம் -நாடு முழுவதும் அமலுக்கு வந்தது!
X

KarthigaBy : Karthiga

  |  2 April 2024 12:01 PM GMT

சுங்குச்சாவடிகளில் வாகனங்களிடம் ரொக்கமாகவோ டிஜிட்டல் பண பரிமாற்றம் மூலமாகவோ கட்டணம் வசூலித்தால் வாகனங்கள் தேங்கி போக்குவரத்து நெரிசல் உண்டாகும். அதை தவிர்ப்பதற்காக 'பாஸ்டேக் 'திட்டம் அமல்படுத்தப்பட்டது .இதன்படி பாஸ்டேக் வில்லைகளை வாகனங்களில் ஒட்டிக்கொண்டால் சுங்கச்சாவடியை கடக்கும் போது ப்ரீபெய்டு கட்டணத்தில் இருந்தோ அல்லது அதனுடன் இணைந்த வங்கி சேமிப்பு கணக்கில் இருந்தோ சுங்க கட்டணம் தானாக கழிக்க பட்டு விடும்.

நாடு முழுவதும் 98 சதவீத வாகனங்கள் பாஸ்டேக் முறைக்கு மாறிவிட்டன .அதே சமயத்தில் சிலர் ஒரே வாகனத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பாஸ்டேக் வில்லைகளையும் ஒரே விலையை ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கும் பயன்படுத்தி வருவதும் தெரிய வந்தது .இதை தடுக்க 'ஒரே வாகனம் ஒரே பாஸ்டேக்' திட்டத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வகுத்தது. இதன்படி ஒரு வாகனத்துக்கு ஒரு பாஸ்டேக் வில்லை தான் பயன்படுத்த முடியும். அனைத்து வாகனங்களும் இந்த திட்டத்திற்கு மாறிக்கொள்ள மார்ச் 31 ஆம் தேதி வரை நெடுஞ்சாலை ஆணையம் கால அவகாசம் வழங்கியது.

பேடிஎம் பாஸ்டேக் புகாரில் சிக்கியதால் அதன் பயனாளர்கள் வேறு வங்கிக்கு மாறும்படி ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கிய கால அவகாசம் முடிந்த நிலையில் நேற்று ஒரே வாகனம் ஒரே பாஸ்டேக் திட்டம் அமலுக்கு வந்தது. இது பற்றி ஒரு அதிகாரி கூறியதாவது, இனிமேல் ஒன்றுக்கும் மேற்பட்ட பாஸ்டேக் வில்லைகள் வேலை செய்யாது. ஒரே வாகனத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பாஸ்டேக் வைத்திருந்தால் அனைத்து வில்லைகளையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News