Kathir News
Begin typing your search above and press return to search.

உலகின் பழமையான மொழி தமிழ் மொழி! முடியாததையும் முடித்துக் காட்டும் ஆற்றல் பெற்றவர்கள் நம் மாணவர்கள்! மோடி பெருமிதம்

உலகின் பழமையான மொழி தமிழ் மொழி! முடியாததையும் முடித்துக் காட்டும் ஆற்றல் பெற்றவர்கள் நம் மாணவர்கள்! மோடி பெருமிதம்

உலகின் பழமையான மொழி தமிழ் மொழி! முடியாததையும் முடித்துக் காட்டும் ஆற்றல் பெற்றவர்கள் நம் மாணவர்கள்! மோடி பெருமிதம்
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Sep 2019 8:04 AM GMT


சென்னையில் நடைபெற்ற ஐஐடி பட்டமளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.இந்த விழாவில் ஆளுநர், முதலவர் துணை முதல்வர் கலந்து கொண்டனர்.


விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி , தற்போது உள்ள இளைஞர்களின் வேகம் அதிக உற்சாகத்தை கொடுக்கிறது. மாணவர்களுக்கு துணை நிற்கும் பெற்றோர்களை வாழ்த்துகிறேன். பெற்றோர்களின் தியாகம் தான் உங்களை உருவாக்கியுள்ளது, இங்கு இருக்கும் இளைஞர்களின் கண்களில் ஒளியை காணமுடிகிறது. மாணவர்களின் வெற்றியில் பெற்றோர்களின் தியாகமும் ஆசிரியர்களின் உழைப்பும் உள்ளது. ஆசிரியர்களை நாம் பாராட்டவேண்டும். பலரது பங்களிப்பு உள்ளதால் தான் ஒருவர் வெற்றி பெற முடியும். இந்தியாவின் எதிர்கால கனவுகளை மாணவர்களின் கண்களில் காண முடிகிறது.


உலகத்தில் உள்ள மொழிகளில் மிக பழமையான மொழி தமிழ் மொழி ஆகும். தமிழகம் அந்த சிறப்பை பெற்றுள்ளது. இந்தியாவின் உள்ள மொழிகளில் மூத்த மொழி தமிழ் மொழி. தமிழை சிறப்பித்து போற்றுவோம்.


உலகமே பார்க்கும் கல்விச்கூடம் இது. உலகமே இந்தியாவின் இளைஞர்கள் மற்றும்,இளம் பெண்கள் மீது மிகுந்த எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. இந்த கல்வி கூடத்தில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பல சாதனைகளை செய்துள்ளனர்.


இந்தியர்களின் தன்னம்பிக்கையை பார்த்து உலகமே வியக்கும் அளவில் உள்ளது. உலக அளவில் பிரபலமாக இருக்கும் இந்தியர்கள் இந்த கல்வி கூடத்தில் பயின்றவர்கள், ஐ.ஐ.டி மாணவர்கள்இந்தியாவின் தூண்களாக திகழ்ந்து வருகிறார்கள்.


இந்தியா உலக அளவில் தொழில்நுட்பத்தில் மிக வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியாவின் கண்டுபிடிப்புகள் உலக அளவில் முக்கிய இடத்தை பிடிக்க வேண்டும், மாணவர்களுக்கு கற்று தரும் ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


இந்தியாவில் கிட்ட தட்ட 200 ஸ்டாட் அப் தொழில்கள் உருவாக்கப்பட்டுள்ளது.அதுவும் இங்கு தான் உருவாக்கப்பட்டுள்ளது .ஓய்வு, தூக்கம் பாராமல் நாம் அடுத்தஇலக்கை நோக்கி நாம் செல்ல வேண்டும். ரோபோடிக் எனும் நவீன தொழில்நுட்பத்தில் மாணவர்கள் கவனம் கொள்ள வேண்டும். மாணவர்களின் கடின உழைப்பு முடியாததையும் முடித்துக் காட்டும் ஆற்றல் பெற்றவர்கள் நம் மாணவர்கள் . உலகின் முதல் 3 ஸ்டார்ட்அப் இந்தியாவால் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News