ஆயிரத்துக்கும் மேற்பட்ட அம்ரித் பாரத் ரயில்கள் வரும் ஆண்டுகளில் தயாரிக்கப்படும் - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தகவல்!
வரும் ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமிரித் பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும் என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
By : Karthiga
மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பத்தாண்டு கால ஆட்சியில் இந்திய ரயில்வே எடுத்த மாற்றத்திற்கான முயற்சிகள் ஏராளம். காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் கொல்கத்தாவில் மெட்ரோ ரயிலுக்காக ஆற்றுக்கடியில் அமைக்கப்பட்ட முதல் சுரங்கபாதை ஆகியவை ரயில்வே துறையில் நிகழ்ந்த சில குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கான சான்று ஆகும். ரயில்வேக்கு மிகப்பெரிய சமூக கடமை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 700 கோடி மக்களை சுமந்து செல்கிறோம் .ரெயிலில் ஒரு நபரை ஏற்றிச் செல்ல கட்டணம் ரூபாய் 100 என்றால் நாங்கள் வெறும் ₹45 தான் வசூலிக்கிறோம்.
எனவே சராசரியாக ரயிலில் பயணம் செய்யும் ஒவ்வொரு நபருக்கும் 55 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறோம். உலகத்தரம் வாய்ந்த ரயிலாக அம்ரித் பாரத் ரயிலை வடிவமைத்துள்ளோம்.இந்த ரயில் ரூபாய் 454 என்ற மலிவு விலையில் ஆயிரம் கிலோமீட்டர் பயணத்தை வழங்குகிறது. வரும் ஆண்டுகளில் இந்தியா குறைந்தது ஆயிரம் புதிய தலைமுறை அம்ரித் பாரத் ரயில்களை தயாரிக்கும்.மேலும் பணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கக் கூடிய ரயில்களை உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகிறது .
வந்தே பாரத் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. ஒவ்வொரு வாரமும் ஒரு வந்தே பாரத் ரயில் ரயில்வேயில் சேர்க்கப்படுகிறது. வரும் சில ஆண்டுகளில் குறைந்தது 400 முதல் 500 வந்தே பாரத் ரயில்களை உற்பத்தி செய்வோம். அதோடு வந்தே பாரத்தில் ரயில்களை ஏற்றுமதி செய்யும் பணியை ரயில்வே ஏற்கனவே தொடங்கியுள்ளது. வரும் ஐந்தாண்டுகளில் முதல் ஏற்றுமதியை காணலாம்.
SOURCE :DAILY THANTHI