சுட்டெரிக்கும் வெயில்... மக்கள் பயப்பட வேண்டிய தேவை இருக்கிறதா?
சுட்டெரிக்கும் வெயில் காரணமாக மக்கள் பயப்பட வேண்டிய தேவை இருக்கிறதா?
By : Bharathi Latha
இந்தியாவில் மட்டுமல்லாது உள்ள உலக அளவில் காலநிலை மாற்றத்தினால் பல்வேறு நிகழ்வுகள் நகல் நடந்து வருகிறது. காலநிலை மாற்றம் என்பது வழக்கமாக ஏற்படக்கூடிய அளவில் இல்லாமல் தற்போது அதிக அளவில் வெப்பம் மற்றும் அதிக அளவில் குளிர் போன்ற பல்வேறு மாற்றங்கள் உலக அளவில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தற்போது கோடை காலம் என்பதால் அதிக அளவு வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் வெப்பம் இருக்கிறது.
குறிப்பாக வெயிலில் நம்மால் வெளியில் நம்மால் செல்ல முடியாத அளவிற்கு அக்னி வெயில் சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் சுட்டெரிக்கிறது, அத்துடன் அனல் காற்றும் வீசி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் முக்கியமான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டிருக்கிறது.
குறிப்பாக மேற்கு வங்காளத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. முன்பே காட்டிலும் அதிக அளவு வெப்பம் மற்றும் அனல் காற்று தொடர்ந்து வீசும் என்று வானிலை ஆராய்ச்சி மையமும் தெரிவித்து இருக்கிறது. மேலும் குறிப்பாக பொதுமக்களுக்கு நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று அது போன்று வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: News