கொரோனா வைரஸ் தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும் - உலகம் முழுக்க 100 கோடி 'டோஸ்' வினியோகிப்பதற்கு இந்திய நிறுவனம் ஒப்பந்தம்!
கொரோனா வைரஸ் தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும் - உலகம் முழுக்க 100 கோடி 'டோஸ்' வினியோகிப்பதற்கு இந்திய நிறுவனம் ஒப்பந்தம்!
கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுக்க இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது. இது நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்க வழி வகை செய்யப்படும். இந்த தடுப்பூசி ரூ .1,000 விலையில் கிடைக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டதில், முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இது உலக அளவில் மக்களிடையே புதுவித தெம்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு விட வழி பிறந்துவிடும் என்ற புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை இந்திய நிறுவனம் தயாரித்து உலகம் முழுக்க விற்பனை செய்ய உள்ளது. அதற்கான லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து, உலகம் முழுக்க 100 கோடி எண்ணிக்கையில் வினியோகம் செய்ய இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்திருக்கிறது.
இந்திய மக்கள்தொகையுடன் ஒப்பிட்டு சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் தடுப்பூச்சியின் பாதி பங்கு ஏற்றுமதி செய்யப்படும் - அதாவது ஒவ்வொரு மாதமும் தயாரிக்கப்படும் சுமார் 6 கோடி டோஸ்களில் இந்தியாவுக்கு 3 கோடி டோஸ்கள் கிடைக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவர் ஆதர் பூனாவாலா கூறியுள்ளார்.
மேலும் "ஆகஸ்டில் இந்தியாவில் 3 ஆம் கட்ட சோதனைகளுக்குச் செல்வதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இது முடிவடைய இரண்டிலிருந்து இரண்டரை மாதங்கள் ஆகும் என்று நாங்கள் கணித்துள்ளோம். இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்று சொன்னால் உற்பத்தியை தொடங்குவோம் என்று கூறியுள்ளார்.