Kathir News
Begin typing your search above and press return to search.

பாக்கெட் 25 ரூபாய் - திருவண்ணாமலை மாவட்டத்தில் களைகட்டும் கள்ளச்சாராய வியாபாரம்! தூங்கும் அதிகாரிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் படுஜூராக கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருகிறது இந்த நிலையில் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.

பாக்கெட் 25 ரூபாய் - திருவண்ணாமலை மாவட்டத்தில் களைகட்டும் கள்ளச்சாராய வியாபாரம்! தூங்கும் அதிகாரிகள்

Mohan RajBy : Mohan Raj

  |  27 July 2022 9:07 AM GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் படுஜூராக கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருகிறது இந்த நிலையில் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி அருகே வெட்டியாந்த தொழுவம், காப்புக்காடு, சிறுமூர், எஸ்.யூ.வனம், முல்லரண்டிபுரம், பூசிமலை குப்பம், அடையப்படும் உள்ளிட்ட கிராமங்களை தற்போது பகிரங்கமாக ஏரி பகுதிகளில் கள்ள சாராய விற்பனை படுஜராக நடைபெற்று வருகிறது.


கள்ளச்சாராயம் பாக்கெட்டுகள் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் கூலி தொழிலாளிகள் மற்றும் தினக்கூலிகள் அங்கு போய் கலாச்சாராயம் வாங்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த சூழலில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவு கள்ளச்சாராயம் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.

இந்த நிலையில் இது சம்பந்தமாக கிராம பொதுமக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் புகார் அளித்தும் வந்தாலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் புலம்புகின்றனர்.

நாளுக்கு நாள் வியாபாரம் சூடு பிடிப்பதால் கள்ளச்சாராயம் தற்பொழுது ஆர்.எஸ்.பவுடரை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன, இதனால் குடிப்பவர்களின் கல்லீரல் முறையில் பாதிக்கப்பட்ட நாளடைவில் நோய்வாய்ப்பட்டு இறக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர், ஆரணி தாலுகா போலீசார் போன்றோர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


Source - News 18 Tamil Nadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News