Kathir News
Begin typing your search above and press return to search.

திருமலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பத்மாவதி திருக்கல்யாண சேவை - அலைமோதும் பக்தர்கள்

திருமலை திருப்பதியில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு நாராயணகிரி பகுதியில் பத்மாவதி திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

திருமலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பத்மாவதி திருக்கல்யாண சேவை - அலைமோதும் பக்தர்கள்

Mohan RajBy : Mohan Raj

  |  10 May 2022 11:30 AM GMT

திருமலை திருப்பதியில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு நாராயணகிரி பகுதியில் பத்மாவதி திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

திருமலை ஏழுமலையான் கோவிலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நடத்தப்படாமல் இருந்த பத்மாவதி திருக்கல்யாண நிகழ்ச்சிகள் இந்த ஆண்டு வெகு சிறப்பாக நடத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது இதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வந்தது.

இந்நிலையில் முதல் நாளான இன்று பெருமாள் திருமண மண்டபத்திற்கு கஜ வாகனத்திலும், இரண்டாம் நாள் அஸ்வ வாகனத்திலும், மூன்றாம் நாள் கருட வாகனத்திலும் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் ஏழுமலையான் எழுந்தருள்வார்.

இதில் ஊஞ்சல் சேவைகளும், புராண இதிகாச சொற்பொழிவுகளும் நடைபெறும் திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும். ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்கர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News