Kathir News
Begin typing your search above and press return to search.

வேலையின் காரணமாக வரும் வலிக்கு இயற்கையான தீர்வுகள் !

சாதாரணமாக வரும் தலை வலிக்கு இயற்கையான முறையில் தீர்வு காண்பது எப்படி?

வேலையின் காரணமாக வரும் வலிக்கு இயற்கையான தீர்வுகள் !
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  10 Aug 2021 11:45 PM GMT

டென்ஷன் காரணமாக ஏற்படும் தலைவலி மிகவும் பொதுவான ஒரு வகை தலைவலி. பலருக்கும் இந்த தலைவலி ஏற்படக்கூடும். இந்த தலைவலி ஏற்படும்போது உங்கள் கண்கள் மற்றும் உங்கள் தலை மற்றும் கழுத்தில் லேசான, மிதமான அல்லது கடுமையான வலி ஏற்படக்கூடும். சிலருக்கு நெற்றியைச் சுற்றி இறுக்கமான பாரமான உணர்வு ஏற்படக்கூடும். இது போன்ற வேலையிடங்களில், வேலையின் காரணமாகவோ வேறு சில காரணங்களாலோ தலைவலி ஏற்பட்டால் அதை உடனே குணப்படுத்த வேண்டும், அதை கவனிக்காமல் அப்படியே விட்டுவிட்டால் அது நாட்பட்ட பிரச்சினையாக மாறக்கூடும்.


தலைவலிக்கு இயற்கையான தீர்வுகளைப் பார்க்கலாம். போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றாலும் தலைவலி ஏற்படக்கூடும். எனவே முடிந்தவரை போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உடலை நீரேற்றமாக வைத்திருந்தாலே உங்களுக்கு தலைவலி, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் எல்லாம் ஏற்படாது. நீர்ச் சத்துள்ள உணவுகளை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். இரத்த சக்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும், நரம்பு மண்டலம் சீராக செயல்படவும் மெக்னீசியம் மிகவும் அவசியமான ஒரு ஊட்டச்சத்து. எனவே மெக்னீசியம் நிறைந்த உணவுகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.


போதுமான உறக்கம் இல்லையென்றாலும் பல விதமான பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் தினமும் குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் வரை தூங்குவது மிகவும் அவசியம். ஹிஸ்டமைன் எனும் ரசாயனம் இயற்கையாகவே உடலினுள் நோயெதிர்ப்பு சக்தி மற்றும் நரம்பு மண்டலத்தில் செயல்படுகளுக்கு உதவ உற்பத்தி செய்யப்படுகிறது. இதை அதிகமாக வெளிப்புற உணவுகளின் மூலம் எடுத்துக்கொண்டால் தலைவலி ஏற்படக்கூடும். யோகா பயிற்சிகளை தவறாமல் செய்வதன் மூலம் உங்கள் அழுத்தம் குறைந்து, உங்கள் உடலின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும்.

Input: https://www.healthline.com/health/migraine/migraine-chills

Image courtesy: wikipedia


Next Story
கதிர் தொகுப்பு
Trending News