அரசு கட்டிடங்களுக்கு கட்சி கலரில் பெயிண்டிங்! ஜெகன் மோகனின் அடுத்த அடாவடி!!
அரசு கட்டிடங்களுக்கு கட்சி கலரில் பெயிண்டிங்! ஜெகன் மோகனின் அடுத்த அடாவடி!!
By : Kathir Webdesk
ஆந்திராவில் கிராம தலைமைசெயலக கட்டிடங்களுக்கு, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கொடியின் வண்ணத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது ஜெகன் மோகன் ரெட்டி அரசு. ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த அடாவடிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
கிராம தலைமை செயலக கட்டிடங்களுக்கு ஒய்எஸ்ஆர் கட்சிக் கொடியில் உள்ள வண்ணங்களில், பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி பா.ஜ.க செய்தி தொடர்பாளர் லங்கா தினகரன் கூறியதாவது:-
ஜெகன் மோகன் மக்கள் வரிப் பணத்தை தவறாக செலவிட்டு வருகிறார். அரசு கட்டிடங்களுக்கு அவரது கட்சி கொடியின் வண்ணத்திலேயே பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. அதற்காக அரசு கருவூலத்தில் உள்ள பணத்தை எடுத்து செலவிடுகிறார்கள்.
அவர்கள் கட்சி கொடியின் வண்ணத்தில் கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடிக்க வேண்டுமானால் அவர்கள் கட்சி சார்பில் சொந்த பணத்தை கொண்டு செய்யட்டுமே. பல மாநில கட்சிகள் வாரிசு அரசியல் செய்து வருகின்றன. இதைதான் தெலுங்குதேசமும் பின்பற்றியது. இப்போது ஜெகனும் செய்கிறார்.
இது போன்ற செயல்களை பா.ஜ.க வன்மையாக கண்டிக்கிறது. மக்கள் பணம் மக்கள் நலனுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும். கட்சிக்காக அல்ல என்பதே மக்களின் விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கிராமங்கள் தோறும் தலைமை செயலகம் அமைக்கும் திட்டத்தை அக்டோபர்2-ஆம் தேதி ஜெகன் மோகன் அரசு அறிமுகப்படுத்த உள்ளது. அனைவருக்கும் அரசு சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்படுவதாக ஜெகன் கூறி இருந்தார். ஆனால் ஆளும் கட்சியின் கொடியின் வண்ணத்தில் கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.