Kathir News
Begin typing your search above and press return to search.

20 இராணுவ வீரர்களை பறிகொடுத்த பாகிஸ்தான் - பலுசிஸ்தானில் மேற்கொள்ளப்படும் அடாவடிக்கு பதிலடி கொடுத்த பலூசிஸ்தான் விடுதலை முன்னணி அமைப்பு!

20 இராணுவ வீரர்களை பறிகொடுத்த பாகிஸ்தான் - பலுசிஸ்தானில் மேற்கொள்ளப்படும் அடாவடிக்கு பதிலடி கொடுத்த பலூசிஸ்தான் விடுதலை முன்னணி அமைப்பு!

20 இராணுவ வீரர்களை பறிகொடுத்த பாகிஸ்தான் - பலுசிஸ்தானில் மேற்கொள்ளப்படும் அடாவடிக்கு பதிலடி கொடுத்த பலூசிஸ்தான் விடுதலை முன்னணி அமைப்பு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 July 2020 5:05 AM GMT

பலுசிஸ்தானின் பஞ்ச்கூர் மாவட்டத்தில் கிச்சக் பள்ளத்தாக்கு அருகே செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் இராணுவத்தின் மூன்று வீரர்கள் கொல்லப்பட்டனர். இதில் ஒரு அதிகாரி உட்பட 8 பேர் காயமடைந்தனர். பலூசிஸ்தான் விடுதலை முன்னணி (பி.எல்.எஃப்) இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், பலூசிஸ்தானின் பஞ்ச்குர் மாவட்டத்தில் உள்ள கிச்சாக் பள்ளத்தாக்கு அருகே பாதுகாப்புப் படையினர் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் சுட்டதில், மூன்று வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒரு அதிகாரி உட்பட எட்டு வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். அவர்கள் குவெட்டாவில் உள்ள ஒருங்கிணைந்த ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியான முரண்டபட்ட தகவல்கள்:

பாகிஸ்தான் ஊடக கூற்றுக்களுக்கு மாறாக, இறந்தவர்களின் புள்ளி விவரங்கள் மேலும் அதிகம் என்று பிற செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. பலூசிஸ்தானில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் தாக்கியதில் 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக அல் ஜசீரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பி.எல்.எஃப் பொறுப்பேற்றதோடு, 20 வீரர்கள் சம்பவ இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பி.எல்.எஃப் செய்தித் தொடர்பாளர் மேஜர் குவாஹ்ரம் பலூச் கூறுகையில்,

இன்று காலை பஞ்ச்கூர் மாவட்டத்தின் கிச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் ஐந்து வாகனங்கள் மீது சர்மாச்சார்ஸ் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஐந்து வாகனங்களையும் சேதப்படுத்தியது. இதில் ஒரு அதிகாரி உட்பட 20 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை கொன்றது. பலுசிஸ்தான் சுதந்திரம் அடையும் வரை தாக்குதல்களை நிறுத்த மாட்டேன் என்று பி.எல்.எஃப் உறுதியளித்துள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News