Kathir News
Begin typing your search above and press return to search.

பாகிஸ்தான்: 'எல்லா மதமும் சமம்' என்ற அரசியல்வாதி மீது ஆவேசம்! இஸ்லாம் மதத்தை நிந்தனை செய்ததாகப் போலீசில் புகார்! #Pakistan #Blasphemy

பாகிஸ்தான்: 'எல்லா மதமும் சமம்' என்ற அரசியல்வாதி மீது ஆவேசம்! இஸ்லாம் மதத்தை நிந்தனை செய்ததாகப் போலீசில் புகார்! #Pakistan #Blasphemy

பாகிஸ்தான்: எல்லா மதமும் சமம் என்ற அரசியல்வாதி மீது ஆவேசம்! இஸ்லாம் மதத்தை நிந்தனை செய்ததாகப் போலீசில் புகார்! #Pakistan #Blasphemy

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 July 2020 2:25 AM GMT

பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (PML -N) அரசியல்வாதி கவாஜா ஆசிப், தேசிய சட்டமன்றத்தில் 'இறைநிந்தனை செய்ததாக' குற்றம் சாட்டபட்டுள்ளார். PTI கட்சித் தலைவர் கமர் ரியாஸ், இது குறித்து போலீசில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

ஜூலை 8 ம் தேதி தனது தேசிய சட்டமன்ற உரையில், கவாஜா ஆசிப், "நாட்டின் அனைத்து சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாப்பது பெரும்பான்மையினர் (முஸ்லிம்கள்) என்ற நமது பொறுப்பு… 1980 களில் பாகிஸ்தானில் அடிப்படைவாதத்தின் எழுச்சி நம்மைக் கீழான மனநிலைக்கு தள்ளி விட்டது. இதன் விளைவாக, நமது சமுதாயத்தில் பிரிவுகள் உருவாகியுள்ளன, அவை இறுதியில் அழிவுக்கு வழிவகுக்கும்… 60 மற்றும் 70 களில் பாகிஸ்தான் ஒரு சகிப்புத்தன்மையுள்ள சமூகமாக இருந்தது, ஆனால் அது இப்போது இல்லை. இது மதத்தைப் பொருட்படுத்தாமல் 22 கோடி மக்கள் வாழும் நாடு. நாட்டின் மற்றொரு மதக் குழுவை விட எந்த மதக் குழுவும் உயர்ந்ததல்ல "என்று கவாஜா ஆசிப் வலியுறுத்தினார்.



தனது புகாரில் ரியாஸ், 'குர்ஆனையும் இஸ்லாத்தையும் அவமதித்ததற்காக' ஆசிப் மீது வழக்கு பதிவு செய்யுமாறு ஜாபர்வால் போலீசாரை ரியாஸ் வலியுறுத்தினார். "அவருடைய வார்த்தைகள் புனித குர்ஆன் மற்றும் சுன்னாவின் போதனைகளுக்கு எதிரானவை, அவை இஸ்லாத்திற்கு எதிரான அவதூறுக்கு ஒப்பானவை. அவர் முஸ்லிம்களையும் காஃபிர்களையும் சமமாக அறிவித்துள்ளார், இது ஷரியாவின் படி ஒரு மிகப்பெரிய குற்றம். " என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் (பிபிசி) பிரிவு 295 (சி) இன் கீழ், இறைநிந்தனை சட்டத்தில், "எவரேனும் வார்த்தைகளால், பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட, அல்லது புலப்படும் பிரதிநிதித்துவத்தால் அல்லது எந்தவொரு குற்றச்சாட்டு, அல்லது தூண்டுதலால், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, புனித நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புனித பெயரை தீட்டுப்படுத்தினால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும், மேலும் அபராதம் விதிக்கப்படும்." என்றுள்ளது.

சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையமும் கவாஜா ஆசிப் (USCIRF)ஆதரவாக முன்வந்தது. ஒரு ட்வீட்டில், நாட்டில் அனைத்து மதங்களும் சமம் என்று கூறியதையடுத்து ஆசிப் மீதான புகாரால் அது கவலைப்படுவதாகக் கூறியது. "இறைநிந்தனை வழக்குகளையும் விரைவாக மறுஆய்வு செய்ய பாகிஸ்தானை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று வலியுறுத்தியது.



கொல்லப்பட்ட பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை 'ஷாஹீத் (தியாகி)' என்று குறிப்பிட்டதற்காக கவாஜா ஆசிப் இம்ரான் கானை கண்டித்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

Source: Samaa TV

Next Story
கதிர் தொகுப்பு
Trending News