விண்ணை முட்டும் விலைவாசி... பாகிஸ்தானில் என்னதான் நடக்கிறது?
பாகிஸ்தானில் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து இருக்கிறது.
By : Bharathi Latha
பாகிஸ்தான் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தது தவிர்த்து வருகிறது. குறிப்பாக அந்நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு தற்பொழுது தீர்ந்து போகும் நிலையில் தான் இருக்கிறது. இந்த நிலையில் டாலருக்கு நிகராக அன்னிய செலவாணி கீழே இறங்கி வருகிறது, அங்கு ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை எட்டி வருகிறது. அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகிறது.
குறிப்பாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்து இருக்கிறது. பொருளாதார நெருக்கடி காரணமாக அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்து இருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தொலைக்காட்சியில் உரையாற்றிய அந்நாட்டின் நிதி அமைச்சர் ஈஷாக் தார் பெட்ரோல் விலை லிட்டருக்கு பத்து ரூபாய் உயர்த்துவதாக அறிவித்திருந்தார்.
மேலும் இந்த வெள்ளை உயர்வு உடனடியாக அமலுக்கு வர இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இதன் மூலம் அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று 282 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறது. அதேசமயம் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏழை எளிய மக்கள் பாதிப்பு அடைந்து வருகிறார்கள்.
Input & Image courtesy: News