பெட்ரோல் டீசல் விலையை குறைந்த இந்தியா: பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்!
பெட்ரோல், டீசல் விலையை குறைத்து அறிவித்த மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்த பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்.
By : Bharathi Latha
இந்தியாவில் போரின் காரணமாக பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வந்து இருந்தது. ஆனால் தற்போது மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை சுமார் 8 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை குறைந்துள்ளது. மேலும் எரிபொருள் விலை சுமையை வாடிக்கையாளர்கள் தலையில் சுமத்துவது குறைக்கும் பொருட்டு இந்த ஒரு முடிவை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. எனவே இந்தியாவில் குறிக்கப்பட்டுள்ள பெட்ரோல் டீசல் விலை குறித்து பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் தன்னுடைய பாராட்டு தெரிவித்து உள்ளார்.
மேலும் இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் இந்திய அரசிற்கு புகழாரம் சூட்டி உள்ளார். மேலும் இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பதிவில் அவர் கூறுகையில், "இந்தியா குவாட் அமைப்பில் உறுப்பினராக இருந்தாலும் கூட அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு உட்படாமல், இந்தியா ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் கச்சாப் பொருட்களை வாங்கி மலிவு விலையில் மக்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இந்த சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை உருவாக்க எனது அரசு முயற்சி செய்தது".
ஆனால் இங்குள்ள உள்ளூர் அரசியல்வாதிகள் அந்நிய சக்திகள் காரணமாக என்னுடைய அரசை கலைத்து விட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். உக்ரைன் ரஷ்யா இரண்டு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற போரின் விளைவாக உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் கச்சா எண்ணெய் விலை மிகக் கடுமையான வகையில் உயர்ந்து இருந்தது ஆனால் இந்திய மட்டும் இரண்டு நாடுகளுக்கும் நடுநிலையாக இருந்து போரை கைவிட வேண்டும் என்றும் ஒரு முடிவைத்தான் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை கூறிக் கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News 18