பாகிஸ்தானுக்கு மனசாட்சியே இல்லையா? இக்கட்டான நேரத்திலும் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த 2 பயங்கரவாத குழுக்களை உருவாக்கியது!
பாகிஸ்தானுக்கு மனசாட்சியே இல்லையா? இக்கட்டான நேரத்திலும் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த 2 பயங்கரவாத குழுக்களை உருவாக்கியது!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள இந்திய பாதுகாப்பு வீரர்கள் மீது பாகிஸ்தான் பெரும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்காக இரண்டு புதிய பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கியது தெரிய வந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படைகள் மீது பயங்கரவாத தாக்குதல்களை நடத்த தடைசெய்யப்பட்ட பயங்கரவாத குழு லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் சேர்ந்து 2 புதிய பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு உருவாக்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
புதிதாக அமைக்கப்பட்ட குழு The Resistance Front (TRF) மற்றும் Tehreek-i-Milat-i-Islami (TMI) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் The Resistance Front (TRF) அமைப்பின் கமாண்டராக அபு அனாஸ் என்பவர் செயல்படுவதும் தெரியவந்துள்ளது.
புதிய பயங்கரவாத குழு Tehreek-i-Milat-i-Islami (TMI) தளபதி நயீம் ஃபிர்தவுஸ் காஷ்மீரில் செயல்படும் அனைத்து போர்க்குணமிக்க குழுக்களையும் ஒன்றிணைக்குமாறு கேட்டு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இரு குழுக்களும் சமூக ஊடகங்களிலும், வாட்ஸ்அப் குழுக்களிலும் தீவிரமாக செயல்படுகின்றன என பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.