Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் இல்லத்தை வாடகைக்கு விட்டு நிதி திரட்டும் கொடுமை - அடுத்து திருமண மண்டபமாக மாற்ற முடிவா? அரசு எருமைகளையும் விற்ற அவலம்!

Imran Khan govt to rent out the official PM residence for fashion and cultural events, after selling all the buffaloes to raise funds

பிரதமர் இல்லத்தை வாடகைக்கு விட்டு நிதி திரட்டும் கொடுமை - அடுத்து திருமண மண்டபமாக மாற்ற முடிவா? அரசு எருமைகளையும் விற்ற அவலம்!
X

Imran Khan (left), PM House (right), images via Dawn

MuruganandhamBy : Muruganandham

  |  4 Aug 2021 10:25 PM IST

இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) அரசு இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் இல்லத்தை வாடகைக்கு விட முடிவு செய்துள்ளதாக சாமா டிவி தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த கட்டிடத்தை பல்கலைக்கழகம் மற்றும் கல்வி மையமாக மாற்றுவதாக உறுதியளித்த இம்ரான் கான், தற்போது பேஷன், கலாச்சார மற்றும் கல்வி நிகழ்வுகளுக்காக அதை வாடகைக்கு விட முடிவு செய்துள்ளார். இந்த முடிவை பாகிஸ்தானின் மத்திய அமைச்சரவை இறுதி செய்தது.

இந்த நிகழ்வுகளின் போது PM மாளிகையின் ஒழுக்கம் பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்ரான் கான் ஆகஸ்ட் 2019 இல் பிரதமர் இல்லத்தை காலி செய்துவிட்டு, பானி காலாவில் உள்ள தனது சொகுசு குடியிருப்புக்கு மாற்றப்பட்டார்.

PM மாளிகைக்கு சொந்தமான எருமை மாடுகள் மற்றும் ஆடம்பர கார்கள் ஏலம்:

முன்னதாக செப்டம்பர் 2018 இல், பிரதமர் இம்ரான் கான் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த எருமைகளை ஏலம் விட முடிவு செய்தார். மாடுகளின் விற்பனை மூலம் 23.02 லட்சங்கள் திட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்க செலவுகளைக் குறைப்பதாக உறுதியளித்த கானின் சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதி இது என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது. பாகிஸ்தானிய பிரதம மந்திரி மாளிகைக்கு சொந்தமான 61 சொகுசு கார்களை ஏலம் விட்டு, 20 கோடியை அரசு நிதியில் சேர்த்தார்.

திருமண மண்டபமாக மாற்றிய கொடுமை

ஏற்கனவே பிஎம் ஹவுஸை திருமண இடமாகப் பயன்படுத்தியதற்காக கான் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டார். அது நடந்து 3 வருடங்களுக்குள், மீண்டும் யு-டர்ன் எடுத்து, பிரதமர் இல்லத்தை வாடகைக்கு விட்டு அரசாங்கத்தின் கஜானாவில் நிதி சேர்க்க முடிவு செய்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News