Kathir News
Begin typing your search above and press return to search.

“பயங்கரவாதத்தை, இனப்பெருக்கம் செய்யும் நாடு பாகிஸ்தான்” - மனித உரிமை ஆர்வலர் பகீர்!!

“பயங்கரவாதத்தை, இனப்பெருக்கம் செய்யும் நாடு பாகிஸ்தான்” - மனித உரிமை ஆர்வலர் பகீர்!!

“பயங்கரவாதத்தை, இனப்பெருக்கம் செய்யும் நாடு பாகிஸ்தான்” - மனித உரிமை ஆர்வலர் பகீர்!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Sep 2019 12:09 PM GMT


பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த ரசாக் பலோச். இவர் பலோச் மனித உரிமை பேரவையின் அமைப்பாளராக உள்ளார். இவர் ஜெனிவாவில் நடந்து வரும் மனித உரிமை மாநாட்டில், பலுசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் செய்யும் அட்டூழியங்களை உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் வகையில் தனி அரங்கம் அமைத்து விளக்கி உள்ளார்.




https://twitter.com/ANI/status/1172080032606380037



ரசாக் பலோச், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-


1947-ஆம் ஆண்டு பலுசிஸ்தான் சுதந்திர நாடாக இருந்தது. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் பலுசிஸ்தானை எங்கள் மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஆக்கிரமித்தது. அன்று முதல் இன்று வரை, பாகிஸ்தானின் அட்டூழியங்கள் சொல்லி மாளாது.


பயங்கரவாதத்தை இனப்பெருக்கம் செய்து வருகிறது பாகிஸ்தான். பலுசிஸ்தான் மக்களை திட்டமிட்டே இனப்படுகொலை செய்து வருகிறது. இது உலகிற்கும் அச்சுறுத்தலாகும். ஏனெனில் அங்கு எந்த சட்டமும் பின்பற்றப்படுவதில்லை. எந்த நீதியும் இல்லை.


பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு வெளிநாடுகளும், சர்வதேச அமைப்புகளும் பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்கி வருகின்றன. இந்த நிதியை பாகிஸ்தான், பயங்கரவாதிகளை உருவாக்க, மதரஸாக்களைக் கட்டுவதற்கும், பயங்கரவாத செயல்களை அரங்கேற்றவும், தற்கொலை படையினருக்கு பயிற்சியளிப்பதற்கும் பயன்படுத்தி வருகிறது.





ஜியா பிரிவு முஸ்லீம்களை படுகொலை செய்கின்றனர். அப்பாவி மக்களை கொன்று குவிக்கின்றனர். முஸ்லிம் நாடு என்ற போர்வையில் இதை செய்கின்றனர். ஜியா பிரிவினர் முஸ்லிம்கள் இல்லையா?


சிந்த் மக்களை அழித்தனர். பலுசிஸ்தான் மக்களை அழித்து வருகின்றனர். பாகிஸ்தானில் எந்த வகையான ஜனநாயகம் உள்ளது என்று தெரியுமா? ஜனநாயகத்திற்கே அவமானத்தை ஏற்படுத்துகிறது பாகிஸ்தான். அங்கு பெயரளவிற்கே பிரதமர் உள்ளார்.


பாகிஸ்தானும், சீனாவும் சேர்ந்து எங்களின் பலுசிஸ்தான் வளங்களை கொள்ளையடித்து செல்கின்றனர். எங்களின் தங்கங்களை கொள்ளையடித்து செல்கின்றனர்.


அவர்களின் மகன்களையும், மகள்களையும் மேற்கத்திய நாடுகளில் உயர் படிப்பை முடிக்க அனுப்பி வைத்துவிட்டு, எங்கள் குழந்தைகளை மதரஸாக்களில் சேர மூளைச் சலவை செய்து தவறான பிரசாரத்தின் மூலம் ஜிஹாதை பரப்புகிறது. பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துகிறது.


பாகிஸ்தானின் உள்ள அனைத்து ஊடகங்களும், அரசியல்வாதிகளும், இராணுவமும் உலகிற்கு பொய்யை மட்டுமே சொல்கின்றன. நாடு ஏற்கனவே மரணப்படுக்கையில் உள்ளது. எனவே சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி உள்ளிட்ட உலகளாவிய கடன் வழங்குபவர்கள், பாகிஸ்தானுக்கு கடன் வழங்க மறுக்கிறார்கள்.


https://www.republicworld.com/india-news/general-news/pakistans-human-rights-violation-exposed-by-baloch-activists



இவ்வாறு அவர் கூறினார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News