Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடியை விமர்சித்த போது அடித்த மின்சார ஷாக் : காமெடியாக மாறிய பாகிஸ்தான் அமைச்சரின் போராட்டம்

பிரதமர் மோடியை விமர்சித்த போது அடித்த மின்சார ஷாக் : காமெடியாக மாறிய பாகிஸ்தான் அமைச்சரின் போராட்டம்

பிரதமர் மோடியை விமர்சித்த போது அடித்த மின்சார ஷாக் : காமெடியாக மாறிய பாகிஸ்தான் அமைச்சரின் போராட்டம்
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Aug 2019 9:22 PM GMT


ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு, 370 பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, பாகிஸ்தானில் "காஷ்மீர் ஹவர்", என்ற பெயரில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.


பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது, "காஷ்மீர் ஹவர்" பொதுக் கூட்டத்தில் பேசுகையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு முழுமையான போர் "அக்டோபர் அல்லது அடுத்த மாதத்தில்" ஏற்படக்கூடும் என்றார். பிரதமர் நரேந்திர மோடி பெயரை குறிப்பிட்டு, "ஹம் தும்ஹாரி மோடி நியாட்டன் சே வாகிஃப் ஹைன் (உங்கள் நோக்கங்களை நாங்கள் அறிவோம்) என்று பேசிய போது திடீரென அவர் கையில் பிடித்திருந்த மைக்கில் மின்சாரம் பாய்ந்து ஷாக் அடித்தது. இதனால் சில நொடிகள் பதறினார். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.




https://twitter.com/nailainayat/status/1167363887802605568?s=19




https://twitter.com/AdityaRajKaul/status/1167364146154729474?s=19


ராவல்பிண்டியில் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றியபோது, ​​'காஷ்மீரின் போராட்டத்திற்கு இறுதியான நேரம் வந்துவிட்டது' என்று ரஷீத் கூறியிருந்தார். "இது இரு நாடுகளுக்கும் இடையிலான கடைசி யுத்தமாக இருக்கும்" என்று அவர் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News