Kathir News
Begin typing your search above and press return to search.

இம்ரான் கான் ஆட்சிக்கு நாள் குறித்த எம்.பி-க்கள் : இன்னும் ஒரே ஒரே வாரத்தில் பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் கூட வரலாம்!

Pakistan PM Imran Khan faces revolt from within ruling party ahead of no-trust vote in Parliament

இம்ரான் கான் ஆட்சிக்கு நாள் குறித்த எம்.பி-க்கள் : இன்னும் ஒரே ஒரே வாரத்தில் பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் கூட வரலாம்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 March 2022 8:39 PM IST

இம்ரான்கானின் திறமை இல்லாத நடவடிக்கை காரணமாக நாடு பொருளாதார ரீதியாக திவால் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டதாக பாகிஸ்தான் நாட்டு எதிர்கட்சிகள் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது.

பிரதமர் இம்ரான்கான் அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து, அவருக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. எதிர்க்கட்சி எம்.பி-க்கள் 100 பேர் சேர்ந்து, கடந்த மார்ச் 8-ஆம் தேதி பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஒன்றை கொண்டு வந்தனர்.

இம்ரான்கான் முன்னெடுக்கும் தவறான பொருளாதார கொள்ளைகளால், கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து, "பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம்" என்ற பெயரில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலுவாக கொண்டு வந்தனர். அதன் மீது மார்ச் 28ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

எதிர்கட்சிகள் ஒருபுறம் இருக்க, இம்ரான் கானுக்கு தன்னுடைய சொந்த கட்சி உள்ளேயும், கூட்டணி கட்சியிலும் பயங்கர எதிர்ப்பு கிளம்பிவிட்டது. இம்ரான் கட்சியை சேர்ந்த 24 எம்.பி.க்கள், அரசை கவிழ்க்க எதிர்க்கட்சியுடன் கைகோர்த்து இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

இதுகுறித்து ராஜா ரியாஸ் என்ற எம்.பி. கூறுகையில், இம்ரான்கான் பண வீக்கத்தை கட்டுப்படுத்த தவறி விட்டார். அரசின் கொள்கைகளில் மகிழ்ச்சியடையாத உறுப்பினர்களில் நாங்கள் ஒரு பகுதியாக இருக்கிறோம் என்றார்.

336 எம்.பி.க்கள் கொண்ட பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தங்களுக்கு 160 எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதில் இம்ரான்கான் கட்சியின் அதிருப்தி எம்.பி.க்களும் அடங்கும். மார்ச் 28ஆம் தேதி இம்ரான்கான் அரசு தப்புமா? என்பது கேள்விக்குறியை!

Next Story
கதிர் தொகுப்பு
Trending News